120
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
கட்சியைச் சார்ந்த பிரதிநிதிகளும் உண்டு ஆக எல்லோரும் கூடி பேச்சுவார்த்தை நடத்தி பத்து பதினைந்து ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த ஊதியத்தினை அவர்களுக்கெல்லாம் போதும் போதும் என்கிற அளவில் உயர்த்திக்கொடுத்து அதன் காரணமாக 4 கோடி ரூபாய் அதிகச் செலவை மின்சார வாரியம் ஏற்றுக்கொள்கிற அளவிற்கு அவர்களுடைய முறையீடுகள் கவனிக்கப்பட்டிருக்கின்றன
ஊதிய உயர்வை அறிவித்தபோது என்னுடைய கையைக் குலுக்கிவிட்டு நன்றிதெரிவித்துவிட்டுச் சென்ற பொறியாளர்கள் இரண்டு நாட்களில் எல்லாம், என்ன காரணமோ நான் அறியேன், அவர்கள் திடீரென்று வேலைநிறுத்தம் செய்யப்போகிறோம் என்றார்கள். எல்லோரும் அல்ல. பொறியாளர்கள் மாத்திரம். இரவு 12 மணிக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றார்கள். ஆனால் மாலை 5 மணிக்கே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு மின் விளக்குகள் எல்லாம் எல்லா நகரங்களிலும் அணைந்து போகிற அளவிற்கு ஒரு கொடிய செயலில் ஈடுபட்டு யாரும் வந்து இயந்திரத்தை மறுபடியும் இயக்க முடியாத அளவிற்கு அவைகளைப் பாழ்படுத்திவிட்டு அவர்கள் வெளியேறினார்கள். அப்படி ஒரு சதித்திட்டம் நடைபெற்றால் இந்த அரசு பார்த்துக் கொண்டிருக்குமா என்று நிருபர்கள் கேட்ட நேரத்தில் சதித் திட்டங்களை இந்த அரசு அனுமதிக்காது, சதித் திட்டங்களை இரும்புக் கரங்களைக் கொண்டு அடக்குவோம் என்று சொன்னேன். அப்படிச் சொன்னதில் சில அரசியல்வாதிகள் சதித்திட்டங்களை எடுத்துவிட்டார்கள். இரும்புக் கரத்தை மாத்திரம் பிடித்துக் கொண்டார்கள். சதித்திட்டங்கள் நடைபெற்றால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று சொன்னேன். முன்னாலே சொல்லப்பட்ட வார்த்தைகளை விட்டு விட்டு, இரும்புக்கரம் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு விவசாயிகள் போராட்டமா, இரும்புக்கரம், நிலப்பறி இயக்கமா இரும்புக்கரம், இப்படி எந்த போராட்டம் நடைபெற்றாலும் இரும்புக்கரம், இரும்புக்கரம் என்று இந்த இரும்புக்கரம் கொஞ்ச நாள் மிக அதிகமாக அரசியல் வட்டாரத்தில் புழக்கத்தில் இருந்தது. ஆனால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? 9 பேர் மீது