உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

121

நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒன்பது பேர் கைது செய்யப் பட்டார்கள். உடனடியாக அவர்கள் வேலைக்குத் திரும்புவதற்கு, எழுதிக் கொடுத்த பிறகு அத்தனை பேரும் மன்னிக்கப்பட்டு, அத்தனை பேரும் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் யாரும் பழிவாங்கப்படவில்லை பழிவாங்குகிற செயலில் அந்த வாரியம் ஈடுபடவில்லை. ஆகவே, இதிலே மிகுந்த இரக்கச் சுபாவத்தோடு பார்க்கவேண்டும். இது பொதுமக்களின் பிரச்சினை. இது மிக மிக முக்கியமான விஷயம் நம் உபயோகத்திற்குத் தேவையான ஒன்று. ஆகவே, தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது அபாயம் என்று கருதியதால் அவர்கள் கைது செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டவர்கள் அத்தனை பேரும் விடுதலை செய்யப் பட்டார்கள். ரூ. 4 கோடி அளவுக்கு ஊதிய உயர்வு கொடுக்கப்பட்ட பிறகு அவர்களது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகுதான் சில அரசியல் நோக்கங்களுக்காக அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதை அனைவரும் மிக்க பெருந்தன்மையோடு ஒப்புக்கொள்ள வேண்டும்.

இதைப்போலவே

நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில்கூட நெய்வேலித் தொழிலாளர்கள் அங்கே போராட்டம் நடத்துவதற்கு முன்பு என்னைச் சந்தித்தார்கள். அப்போது நான் கண்வலியால் மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டு இருந்தேன். மூன்று நான்கு நாட்கள் உட்கார்ந்து பேசி 92 இலட்ச ரூபாய் அளவுக்கு அவர்களுக்கு ஊதியம் உயர்த்துவதற்கான நிலை உருவாக்கப்பட்டது. மே 1-ம் தேதி அவர்கள் விழாவைக் கொண்டாடிவிட்டு, அன்றையதினம் ஏற்பட்ட சில சந்தேகங்களின் காரணமாக மறுநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். பிறகு அவர்களே ஒப்புக் கொண்டார்கள், அந்த வேலைநிறுத்தம் சட்ட விரோதம்தான். நாங்கள் சட்டப்படி அறிவிப்பு செய்யவில்லை என்று சொன்னார்கள். அந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட சில அசம்பாவிதத்தால் போலீசார் துப்பாக்கிப்பிரயோகம் செய்தார்கள். தேவன்பு என்றவர் இறந்து விட்டார். உள்ளபடியே இந்த அரசிலே இருக்கிற அத்தனைபேரும் ஆழ்ந்த அனுதாபத்தோடு அதற்கு வருத்தம் தெரிவித்தோமே, தவிர