உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

போராடினார்களா, தேவன்பு சுடப்பட்டானா, சரிதான் என்று போலீசைத் தட்டிக்கொடுக்கவில்லை. விசாரணை வைத்தோம். அப்படி வைக்கப்பட்ட விசாரணை அறிக்கையிலேகூட குறிப்பிட்ட அதிகாரி குப்பத்திலே போய் நுழைந்தது தவறு என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. அந்த விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்வோம் என்பதை இந்த மன்றத்திலே தெரிவித்துக்கொள்கிறேன்.

கோவை விவசாயிகள் கிளர்ச்சியைப் பொறுத்தவரையில் அவர்களுடைய கோரிக்கைகளை அரசு அறியும். அதில் என்ன சங்கடங்கள் இருக்கிறது என்பதும் தெரியும். இது பற்றி திரு. பூவராகன் அவர்கள் என்னிடத்தில் வந்து பேசினார்கள். அவர் அமைச்சராகப் பதவியில் இருந்த காரணத்தால் அவர்களிடத்தில் இருக்கிற சங்கடங்களை விளக்கினேன். திரு. மன்றாடியார் தலைமையில் விவசாயச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வந்தார்கள். ஒரு முடிவை வெளியிட்டோம். அதற்குப்பிறகு இதே அவையில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், 'பாதி கிணறு தாண்டி இருக்கிறீர்கள் என்றாலும் பரவாயில்லை, முழுக்கிணறு தாண்டுங்கள்' என்று சொல்கிற அளவுக்கு நான் அந்த விவசாயிகள் பிரச்சினையைக் கவனிக்க முடியாது என்று மறுத்துவிடவில்லை. அவர்களுக்கு மான்யமாகக் கொடுப்பது பல கோடி ரூபாயாக ஆகிறது. 75 அடிக்குமேலே உள்ள கிணற்றிற்கு 9 பைசாவும், அதற்குக் குறைவாக உள்ள கிணறுகளுக்கு 10 பைசா வசூலிக்கலாம் என்று சொன்னோம்.

விவசாயச் சங்கத்தின் செயலாளர் எனக்கு எழுதிய கடிதத்தில் என்ன குறிப்பிட்டு இருந்தார். அந்தக் கடிதத்தில், நீங்கள் அந்தச் சலுகை அளித்து இருப்பதற்கு நன்றி, ஆனால் 75 அடி ஆழத்திற்குமேல் உள்ள கிணறுகள் கோவை மாவட்டத்தில் 15 சதவிகிதம் இருக்கின்றன. ஒன்பது பைசா வீதம் 85 சதவிகிதம் பயன் அடைந்து இருக்கின்றனர். ஆகவே இந்த மீதமுள்ள 15 சதவிகிதக் கிணறுகளுக்கும் 9 பைசாவாக ஆக்கவேண்டுமென்று கேட்டார்கள். உங்கள் மாவட்டத்திற்கு மட்டும் 9 பைசா என்று நிர்ணயிக்க முடியாது. தமிழகத்திலே இருக்கிற வேறு பல மாவட்டங்களிலும் இது போன்று குறைக்க வேண்டிவரும், அதன்