உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

123

காரணமாக மேலும் சில கோடி ரூபாயை இழக்க நேரிடும். இப்போது தேவையில்லை. கொஞ்சம் பொறுத்து இருங்கள் என்று சொன்னேன். அவர் பார்த்துவிட்டுச் சென்ற சில நாட்களுக்குள் ஓர் அறிக்கை விட்டார்கள். வன்முறைக் கிளர்ச்சியில் ஈடுபடுவோம் என்று எழுதினார்கள். அதற்குப்பின்னாலே அவர்களே, அது தவறு என்று குறிப்பிட்டு கடிதம் எழுதிவிட்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.

அந்தக் கிளர்ச்சியின் காரணமாக 3 பேர் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார்கள் என்ற செய்தி வந்தது. மூன்று பேர் என்ன, 30 பேர் செத்தாலும் பரவாயில்லை என்ற அளவுக்கு இந்த அரசு இல்லாமல், இதை அரசு கௌரவப் பிரச்சினையாகப் பார்க்காமல், ஆணவத்தோடு பதில் சொல்லாமல், 3 பேர் உயிர் துப்பாக்கிக் குண்டால் பிரிக்கப்பட்டது என்று செய்தி வந்ததும் உடனடியாக நீதி விசாரணை வைக்கவேண்டுமென்று கேட்பதற்கு முன்னாலே, வைக்கப்பட்டது. நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப் பட்டது. வாங்கமறுத்தார்கள், அல்லது மறுக்கும்படி செய்யப் பட்டார்கள். நஷ்ட ஈடு கேட்காமலேயே நஷ்ட ஈடு வழங்குவதற்கு இந்த அரசு முன்வந்தது. அவர்களுக்கு அனுதாபம் காட்டினோம். தவிர்க்க முடியாத அளவுக்கு இந்தத் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டு விட்டது என்று உணர்கிறோம். அந்த உணர்வுடன் ஏற்கெனவே ஆண்டு கொண்டு இருந்த காங்கிரஸ் ஆட்சி, காங்கிரஸ் ஆட்சி என்று சொன்னால் திரு. கருத்திருமன் அவர்கள் பக்தவத்சலம் என்று நினைக்கலாம், ஆனால் மதிப்பிற்குரிய திரு. காமராஜர் காலத்திலிருந்து நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சி அப்படிப்பட்ட உடனடியாக செய்யவேண்டிய காரியங்களை செய்து இருக்கிறதா. வரலாறு உண்டா, என்று எண்ணிப்பார்க்கவேண்டும்.

நிலப்பறி இயக்கம், அதிலே போலீசார் அடக்குமுறை என்று சொன்னார்கள். நிலப்பறி இயக்கம் என்று சொன்ன உடனே கம்யூனிஸ்ட்கள் கோபித்துக்கொள்ளப்போகிறார்கள். நில மீட்சி இயக்கம் என்று அவர்கள் பெயர் கொடுத்து இருக்கிறார்கள். அந்த நிலப்பறி இயக்கத்தை இந்தியா முழுவதிலும் நடத்துவது என்று திட்டமிட்டார்கள். தமிழ்நாட்டிலும் நடத்தப்போகிறோம் என்று சொன்னார்கள். நடத்துவதற்கு முன்பு எத்தகைய வேகமான