உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

அறிக்கைகள் வந்தன. கருணாநிதியின் இரும்புக்கரம் என்ன செய்கிறது பார்ப்போம் என்று அறைகூவல் விடப்பட்டது. இவ்வளவுக்கும் பிறகு அந்த நிலப்பறி இயக்கத்தை 15-ம் தேதி நடத்தப்போகிறோம் என்று சொன்னார்கள். எந்த 15-ம் தேதி, ஆகஸ்ட் 15-ம் தேதி. இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில், பிரிட்டிஷ் காரனிடத்தில் இருந்து இந்தியாவை மீட்ட நாளில் நிலப்பிரபுக் களிடமிருந்து நிலத்தைப் பறிப்பதற்கு திட்டம் வகுத்தார்கள். அதற்கு பாதயாத்திரை ஏற்பாடு செய்தார்கள்.

அந்தப் பாதயாத்திரை என்பது பிரசாரத்திற்கு எனச் சொல்லப்பட்டதே தவிர, அது வெறும் பிரசாரத்திற்கு மட்டும் அல்ல என்பதும் ஆங்காங்கு நிலப்பறி இயக்கத்தில் ஈடுபடுவதற்கு ஆட்களை திரட்டுவதற்காக என்று அறிந்து காவல்துறை வெகு உன்னிப்பாகக் கண்காணித்து நடவடிக்கை எடுத்தார்கள். அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளிலும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் எந்தவித மதிப்புக் குறைவாகவும் நடத்தப்பட வில்லை. எந்த அசௌகர்யமும் ஏற்படாத அளவுக்குப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று சிறைச்சாலை அதிகாரிகளுக்குச் சொல்லப்பட்டது.

திரு. கல்யாணசுந்தரம், திரு. மணலி கந்தசாமி அவர்களும் ஏற்கெனவே உடல் நிலை சரியில்லாதவர்கள், திரு. கல்யாண சுந்தரம் அவர்களுக்கு சுவாச நோய் உண்டு. சட்டமன்றத்திலே தான் கொஞ்சம் கஷ்டப்பட்டு எழுந்து நின்று பேசுவார். மற்றப் பொதுக்கூட்டங்களில் பேசுகிறபோது உட்கார்ந்து கொண்டுதான் பேசுவார். மணலி கந்தசாமி அவர்களும் உடல் நலம் சரியில்லா தவர்கள். மிகுந்த கவனிப்பு கொடுக்க வேண்டுமென்று சொன்னேன். அவரைத் திருச்சியிலிருந்து சென்னைக்கு அழைத்துக்கொண்டு வரவேண்டுமென்று சொன்னார்கள். என்னைப் பாளையங்கோட்டைக்கு போலீஸ் லாரியில் ஏற்றிச் சென்றதைப்போல் அவரை அழைத்து வராதீர்கள் காரில் அழைத்து வாருங்கள் என்று சொன்னேன். அவர் பெரிய காரில் டி.ஐ.ஜி. காரில் அழைத்து வரப்பட்டார். இங்கே சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகுந்தமுறையில் அவர் கவனிக்கப்பட்டார்.