உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

இதேபோன்று பரலி நெல்லையப்பர் அவர்களுக்கும் உதவித்தொகை வழங்கி வருகிறோம்.

அது மட்டுமல்ல, கட்டபொம்மன் குடும்பத்தைச் சேர்ந்த 5 குடும்பத்தினர்களுக்கு உதவி வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். கட்டபொம்மன் சிலையைத் திறந்து வைக்கத் தான் அவர்கள் போனார்களே தவிர, முதலமைச்சராக இருந்தபொழுது கட்டபொம்மன் இருந்தானா, கெட்டான் போ என்று சொல்லிவிட்டார்கள். இப்பொழுது கட்டபொம்மன் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு உதவிப்பணம் கொடுத்து வருகிறது.

என்ன சாதித்துவிட்டீர்கள், என்ன சாதித்துவிட்டீர்கள் என்று கேட்டார்கள். சேலம் இரும்பாலைத் திட்டத்தைப் பெற்றது சாதனை இல்லையா? அது காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலே திட்டமிடப்பட்டிருக்கலாம். அதற்காக திரு. வெங்கட்டராமன், நிதியமைச்சராக இருந்த திரு. சுப்பிரமணியம் ஆகியவர்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். திரு. காமராஜ் அவர்கள் ஒத்துழைத்ததற்காக நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் வராமலிருந்த அந்தத் திட்டத்தை வரக்கூடிய அளவிற்குச் செய்த பெருமை எங்களுடையதுதானே?

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகமாக இருந்தது, ஆழ்கடல் துறைமுகமாக மாற்றப்பட்டது எங்கள் காலத்தில்தானே? முன்னேற்றக் கழகமும், தோழமைக் கட்சிகளும் எழுச்சிநாள் போராட்டம் நடத்தி, பிறகு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் அல்ல, அது ஆழ்கடல் துறைமுகம் என்று அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி உரத் தொழிற்சாலை ஏற்படவில்லையா?

கல்பாக்கத்தில் இரண்டாவது கட்டமாக 200 மெகாவாட்

அதிகமாகப் பெறவில்லையா?

3 சர்க்கரைத் தொழிற்சாலைகளுக்கான புதிய அனுமதியைப் பெறவில்லையா?

இப்பொழுது உணவு அமைச்சரவர்கள் ஒரு தகவலைத் தருகிறார்கள். நீண்ட காலமாக அலமாதி என்ற இடத்தில் முர்ரா எருமைப்பண்ணை அமைக்கவேண்டுமென்று கேட்டு வந்து,