உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

153

அதற்கு இப்பொழுது மத்திய சர்க்காரின் ஒப்புதல் கொடுக்கப் பட்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு 82.91 இலட்சத்திற்கு மத்திய சர்க்காரும் ஒப்புதல் கொடுத்திருக்கிறது. இதையும் முன்னேற்றக் கழகத்தின் சாதனை என்று நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்களா?

ஆகவே, இவைகளிலெல்லாம் நாங்கள் முழுத்திருப்தி அடைந்துவிட்டோமா என்றால் இல்லை. இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் ஏராளம் இருக்கின்றன. ஆனால், அவைகளுக்கு இருக்கின்ற அதிகாரங்கள் போதாது என்பதுதான் எங்களுடைய வாதம். தமிழரசுக் கழகத் தலைவர் சிலம்புச் செல்வர் திரு. ம.பொ.சி. அவர்களின் வாதமும் ஆகும். அதிக அதிகாரங்கள் வேண்டுமென்று கேட்டால் கூடாது, கூடாது என்று சொல்கிறீர்களே. ஏன்? வறட்சி நிவாரணத்திற்காகப் பணம் கொடுக்காதே, கொடுக்காதே என்று சொல்கிறீர்களே, ஏன்? அதிகாரங்கள் கொடு என்று கேட்டால் கொடுக்காதே. கொடுக்காதே என்று ஏன் இந்த சுக்கிராச்சாரியார் வேலை செய்கிறீர்கள்? சுக்கிராச்சாரியார், மாவலி தாரை வார்க்கும்பொழுது கெண்டியில் அடைத்துக்கொண்டு, தர்ப்பையினால் குத்தப்பட்டு என்ன ஆனார்? உதாரணத்திற்காகப் புராணக் கதையைச் சொல்லுகிறேன்.

ஆகவே, ஏன் இப்படி இடையிலே நின்று கொடுக்காதே கொடுக்காதே என்று சொல்லவேண்டும்? வழி மறைத்திருக்கிறது சற்றே விலகியிரும் பிள்ளாய்! அதிகாரம் வேண்டுமென்று கேட்கிறோம் என்றால் அது உங்களுக்கும் சேர்த்துத்தான். வருங்கால சந்ததியினருக்காகவும் சேர்த்துத்தான், நான்கு கோடி தமிழக மக்களுக்கும் சேர்த்துத்தான் கேட்கிறோம்.

தனிக்கொடி கேட்டதைப்பற்றி கூறுகிறார்கள். மலேசியாவி லிருந்து இந்தக் கொடிகள் வந்திருக்கின்றன. பாருங்கள் (அவைக்குக் காட்டப்பட்டன). தமிழகத்தைவிட குறைவான மக்கள் கொண்ட மலேசியா, அந்த மலேசியாவிலிருந்து வந்த கடிதத்திலே, தமிழகத்தைவிட சற்றுக் கூடுதலான நிலப்பரப்பையும், தமிழகத்தின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியை மட்டுமே மக்கள் தொகையாகக் கொண்ட சின்னஞ்சிறிய நாடாகிய எங்கள் மலேசிய நாட்டில் பதின்மூன்று மாநிலங்கள் இருக்கின்றன என குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் சற்றேறக்குறைய