154
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
தமிழகத்திலுள்ள ஒரு மாவட்ட அளவுக்கு சின்னஞ்சிறியதாக இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி முதலமைச்சர்கள், அமைச்சர்கள் இருக்கிறார்கள். தனித்தனி சட்டமன்றங்கள், தனித்தனிக் கொடிகள், தனித்தனி சின்னங்கள் இருக்கின்றன. மைய அரசுக்கென்று தனிக்கொடி - தேசியக்கொடி, தனிச்சின்னம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதோ இருக்கிற கொடிகள், இங்கே அடித்தவை அல்ல, மலேசியாவில் அடித்தவை.
திரு. சீமைச்சாமி அவர்கள்கூட கோபமாக, இனிமேல் நீங்கள் இந்திரா காந்தியை ஆதரித்தால் நாங்கள் உங்களோடு இருக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். ராஜாஜியிடம் அனுமதி வாங்கித்தான் சொன்னேன் என்று கூறியிருக்கிறார்கள். ராஜாஜிகூட குறிப்பிட்டிருக்கிறார்கள். நான் மிகுந்த பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன், சீமைச்சாமி அவர்களே, சுதந்திராக் கட்சியின் தலைவர் என்ற முறையில், இங்கேயிருக்கும் தலைவர் என்ற முறையில் அவர்களையும், மூத்த தலைவர் திரு. ராஜாஜி அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன். 200 பேர் ராஜாக்கள், அந்த ராஜாக்களுக்கு மானியம் கொடுக்க வேண்டாமென்று மட்டும் சொன்ன குற்றத்திற்காக தி.மு.க. வுடன் சேர மாட்டோம் என்று சொல்லிவிட்டு, சிண்டிகேட்டுடன் சேரும் ராஜாஜி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன், நான்கு கோடி தமிழ் மக்களின் வாழ்வை, மொழியை, உரிமையை, அவர்களின் வளத்தை, அவர்களின் எதிர்காலத்தை, நாட்டை அழிக்கும் இந்தி ஆதிக்கத்திற்கு ஓட்டுப்போட்ட சிண்டிகேட் காங்கிரசோடு சேர ராஜாஜி அவர்கள் முன்வருவார்களா? 200 ராஜாக்களுக்கு மானியம் வேண்டாமென்று நாங்களும், இடதுசாரிக் கட்சிகளும் அங்கிருக்கும் இந்திரா காந்தி அம்மையாரை ஆதரித்தது சரியா, தவறா என்று சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். ராஜாஜி அவர்கள் இதைப்பற்றி ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
ய
நம்முடைய திரு. கருத்திருமன் அவர்கள் கொண்டு வந்திருக்கும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் உள்ளபடியே இந்தச் சபையில் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. அவரேகூட ஒருவேளை நல்ல மனது வைத்து, இவ்வளவு விளக்கத்திற்குப்