உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

பேர்களுக்குத் தஞ்சை மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு, அதிலேயும் பெரும்பாலும், அரிசன மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், அவர்களுக்குக் குடியிருப்பு மனைகள் சொந்தமாக்கப்பட்டன. ஆரம்பத்திலேகூட, அதற்கு ஒரு தொகை செலுத்த வேண்டும், அதைக் கடனாக அரசு கொடுக்கும், அரசுக்குத் திரும்பச் செலுத்த வேண்டும் என்று சட்டமன்றத்திலே நாம் ஒரு முடிவை எடுத்தோம். ஆனால் அந்த முடிவு மாற்றப்பட்டு இன்றைக்கு அவர்கள் தொகை எதுவும் செலுத்த வேண்டியதில்லை, அந்த மனைக்கு எவ்வளவு தேவையோ அதை மிராசுதாரர்களுக்கு அரசாங்கமே கொடுத்து விடும் என்ற முடிவையும் அரசு எடுத்திருக்கிறது. இவைகளெல்லாம் ஏழை எளிய, நடுத்தர மக்களுக்காகச் செய்யப்பட்ட காரியங்கள்.

பணம்

சோஷலிசம், கம்யூனிசம் பேசுகிறார்கள். ஆனால் எந்த சோஷலிசத் திட்டத்தைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு புறக்கணித்துவிட்டது? பேருந்துகள் தேசீயமயமாக்கப்பட வேண்டும் என்று இந்த அரசு அமைந்தவுடனேயே, இங்கே பஸ்களைத் தேசீயமயமாக்க முதல் கட்டமாக 75 மைல்களுக்கு அப்பாலுள்ள வழித்தடங்கள், சென்னையிலிருந்து புறப்படும் வந்துசேரும் வழித்தடங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் வந்துசேரும், புறப்படும் வழித்தடங்கள் இவைகள் தேசீயமயமாக்கப்பட்டன.

பிறகு 10 பஸ்களுக்கு மேல் யாரும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று உச்சவரம்பு கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து, 50 பஸ்களுக்கு மேல் இருந்த கம்பெனிகள் தேசீயமயமாக்கப்பட்டன. மேலும் எல்லா பஸ்களும் படிப்படியாக தேசீயமயமாக்கப்பட வேண்டுமென்று, ஆக்கப்படும் என்ற அறிவிப்பை விடுதலை நாள் வெள்ளி விழாச் சிறப்புக் கூட்டத்தில் இந்த அவையிலே அறிவித்தேன். அதற்கான விதிமுறைகளைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நண்பர் இராமச்சந்திரன் அவர்கள் சட்ட அமைச்சரோடு வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, பேருந்து முதலாளிகளுக்கு ஏற்பட்ட கோபத்தைப்பற்றி இங்கே பேசியவர்கள், குறிப்பாக, ஏ.ஆர்.பெருமாள் போன்றவர்கள் சொன்னார்கள்.

யாருடைய கோபத்தைப் பற்றியும் நான் கவலைப்படப் போவதில்லை. இருப்பது இரண்டு நாள்தான் என்றாலும், ஆட்சிச்