உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

181

தலைவர் காமராஜர் அவர்கள்கூடச் சொல்லியிருக்கிறார், பட்டா வழங்குகிறேன், பட்டா வழங்குகிறேன் என்று சொல்கிறார்கள், இது என்ன பெரிய விவகாரம், ஏற்கெனவே குடியிருந்த இடத்தைத் தானே கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார். ஆனால் உண்மை என்ன என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். ஏற்கெனவே குடியிருக்கிற இடம்தான். ஆனால் அந்த இடத்தைப் பிரித்துப் பழுது பார்க்க உரிமை அவர்களுக்கு இல்லை. அந்த இடத்தின் கூரையை அகற்றிவிட்டு ஓட்டு வீடாக மாற்றி அமைக்கின்ற உரிமை அவர்களுக்கு இல்லை. அந்த வீட்டை பத்தாண்டுகளுக்குப் பிறகு விற்கவோ, அடைமானம் செய்வதற்கோ உரிமையில்லை. அந்த உரிமை இல்லாமல், எந்த நேரத்திலே வெளியேறு என்று சொன்னாலும் வெளியேற வேண்டிய துர்ப்பாக்கியமான நிலையிலிருந்தவர்கள். காலையிலே திருப்பூர் மொய்தீன் அவர்கள் கூறியதைப்போல், வெளியேறு என்றால் வெளியேற வேண்டியவர்கள். விரட்டப்படக்கூடிய அளவில், அடிமைகளைப்போல் இருந்தவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு 1947-ஆம் ஆண்டு முதல் 1967-ஆம் ஆண்டு வரையில், இருபதாண்டுக் காலத்தில் கொடுக்கப்பட்ட நிலப்பட்டா எவ்வளவு? 1,11,443 பட்டாக்கள் இருபதாண்டுக் காலத்தில். ஆனால் இந்த ஐந்தாண்டுக் காலத்தில், எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையைப்பெற முடியாமல் இருக்கும் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில், ஐந்தாண்டுக் காலத்தில் 2,72,235 பேர்களுக்கு நிலப்பட்டா. அதைப் போலவே மனைப்பட்டா இருபதாண்டுக் காலத்தில் 63,770 பேர்களுக்கு, இருபதாண்டுக் கால காங்கிரஸ் ஆட்சியில் அளிக்கப்பட்டது. ஆனால் ஐந்தாண்டுக் கால கழக ஆட்சியில் 3,52,013 பேர்களுக்கு நாம் பட்டாக்களை வழங்கியுள்ளோம்.

தஞ்சை மாவட்டத்திற்கு என்று தனிச் சட்டம் இயற்றினோம். திரு.மணலி கந்தசாமி அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களிலே ஒருவர். அவர் தஞ்சையிலே நடைபெற்ற குடியிருப்பு மனைகளைச் சொந்தமாக்கும் விழாவில் பேசும்பொழுது சொன்னார்கள். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இரவு 12 மணிக்கு

இந்தப்

பட்டாக்களை வாங்கிக் கொண்டு சென்று இன்று இரவு தூங்கும்பொழுது நம்முடைய சொந்த வீட்டிலே தூங்குகிறோம் என்ற உணர்ச்சியோடு தூங்குவார்கள் என்று பெரியவர் கந்தசாமி அவர்கள் கூறினார்கள். இன்னொன்றும் சொன்னார்கள், இரத்தப் புரட்சியால் சாதிக்கக்கூடிய காரியத்தை கழக அரசு ஒரு துளி செலவிலே சாதித்து விட்டது என்று சொன்னார்கள். 1,54,274