உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

ஆதாரம் இவைகளுக்கு ஏற்றவாறு நாம் வகுத்திருக்கிறோம். நான் முதலில் கூறியபடி இளைஞர் அணி மூலம் 3,000 பேர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. பயிற்சி ஆசிரியர்கள் 6,500 பேர்களுக்கு வாய்ப்பு.

கிராம சாலைகள்-மேம்பாடு திட்டத்தின் மூலம் மத்திய அரசின் உதவியோடு 15,000 பேர்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுத்திருக்கிறோம். பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுத்திருக்கிறோம். பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்புத் தந்து, 600 பட்டதாரிகள், 1,000 டிப்ளமா ஹோல்டர்ஸ், 1,000 கிராஃப்ட்ஸ் மென் இரண்டாண்டு பயிற்சி பெறுவார்கள். அவர்கள் பயிற்சி முடிந்த பிறகு அந்தந்தத் துறைகளிலே சேர்க்கப்படுவார்கள் என்ற உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களுக்குக் கடன் கொடுக்கும் திட்டம், 3,000 பேர்களுக்குக் கடன் கொடுக்கும் திட்டம் இன்றைக்குத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

கிராமப்புற சிறப்பு வேலைத் திட்டத்தின் மூலம், 15,000 பேர்களுக்கு வேலை வாய்ப்பு.

குளங்கள், ஏரிகள் இவைகளைச், சீர்திருத்த, மேம்படுத்த, ஆய்வு செய்வதற்காக 418 பொறியாளர்கள், 607 டிப்ளமோ தாரர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

என்ஜினியரிங் பட்டதாரிகள் 20,000 ரூபாய்க்குக் குறைவான வேலைகள், காண்டிராக்ட்ஸ் எடுத்தால் 5 சதவிகிதம் வரை அதிகப்படுத்திக் கொடுக்கலாம் என்று ஆணையிடப் பட்டுள்ளது.

முதல் கிரேட் கான்ஸ்டபிள்கள் 1,000 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள்.

105 டாக்டர்களுக்குப் புதிய பதவிகள் ஏற்படுத்தப்பட்டன. 205 நர்ஸ்களுக்குப் புதிய பதவிகள் ஏற்படுத்தப்பட்டன.

இவைகள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் நம்மால் முடிந்த வரையில் செய்த சாதனைகளாகும்.

தமிழ்நாடு முழுவதும் தாங்கள் குடியிருக்கும் இடம் தங்களுக்குச் சொந்தமாக்கப்படாமல் இருக்கிறதே என்று கவலைப்பட்ட மக்கள் இலட்சக்கணக்கில் இருந்தார்கள். பெருந்