உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

201

தலைவர்கள் ஊழல், ஊழல் என்று சொல்கிறார்களே என்று எண்ணும்போது உள்ளபடியே வருத்தப்படுகிறேன். சில விஷயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். காமராஜ் அவர்கள் கன்னியாகுமரித் தொகுதியில் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட் டார்கள். சி.சுப்பிரமண்யம் அவர்களே சட்டமன்றத்தில் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள், இங்கே நிதி அமைச்சராக இருந்த பொழுது. "நாம் யாரும் நமக்கு ஆன தேர்தல் கணக்கைச் சபையில் சொன்னால், ஒருவர்கூட எம்.எல்.ஏ.ஆக வர முடியாது” என்று திரு.சி.சுப்ரமண்யம் அவர்கள் இங்கே ஒத்துக்கொண்டிருக் கிறார்கள். காமராஜுடைய நாடாளுமன்றத் தேர்தலின் செலவுக் கணக்கு அவர் கொடுத்த கணக்காக இருக்க முடியுமா? இப்படிக் கேட்கிற காரணத்தால் “உன் சேதி என்ன?” என்று கேட்க முடியும். ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டேயிருந்தால் ஊழல் எங்கே இருக்கிறது என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. ஆகவே, நான் அதை சூசகமாக விட்டுவிடுகிறேன்.

காமராஜ் அவர்கள் “சமவாழ்வு" என்ற புத்தகத்தில் இந்த ஊழல் லஞ்சம் என்பதைப்பற்றி அழகான மணிவாசகங்களைத் தமிழகத்திற்கு தந்திருக்கிறார்கள். “சமவாழ்வு” புத்தகம் - பக்கம் 37. அதில் சொல்லுகிறார் :

“லஞ்சத்தை ஒழித்து விடுவேன் என்று ராஜாஜி கூறுகிறாரே; அவர் என்ன பரசுராமர் அவதாரமா?”

என்று காமராஜ் கேட்கிறார். பிறகு அவரே---

“லஞ்சம் இல்லை என்று யார் கூறுகிறார்கள். அந்தக் காலம் முதல் லஞ்சம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இப்போது கொஞ்சம் அதிகமாகி விட்டது. ராஜாஜி ஆண்ட காலத்தில் லஞ்சமே இல்லையா என்ன?”

இது காமராஜுடைய கேள்வி. பிறகு “சமவாழ்வு” புத்தகம்-- 38-ம்

பக்கம்:

'ஆயிரம் பேர் போட்டி போட்டுக் கொண்டு லஞ்சம் கொடுக்க வருவதால் அவன் அதை ஏலத்துக்கே விட்டு விடுகிறான்”.

'ஏலம் எடுத்தவன் போக லஞ்சம் கொடுக்கப் போன மற்ற 999 பேரும் 'லஞ்சம், லஞ்சம்' என்று கூப்பாடு போடு கிறார்கள். ஏழைக்கு ஒன்றுமே புரியவில்லை. லஞ்சமா?