உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

243

பேரவையை ஒரு வாய்ப்பாகக் கொள்கிறோம் என்று எடுத்துச் சொன்ன கருத்தை நான் வரவேற்கிறேன்.

இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் எடுத்துக் காட்டப் பெற்றக் குறைபாடுகள், குற்றச்சாட்டுகள் இவைகளுக்கு எல்லாம் நம்முடைய மாண்புமிகு உணவு அமைச்சர் அவர்கள் இவ்வளவு நேரம் விளக்கமான பதில்களை இங்கே கூறியிருக்கின்றார்கள். நேரம் அதிகம் இல்லாத காரணத்தாலும் நான் பேசிய பிறகு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ள நண்பர் மாரிமுத்து அவர்கள் மீண்டும் உரையாற்றுவதற்கான நியதியிருக்கிற காரணத்தாலும் விரைவிலேயே என்னுடைய உரையை நான் முடிக்கலாம் என்று கருதுகிறேன்

அது மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய பல பிரச்சினைகளுக்கு இந்த மாமன்றத்திலே நான் தொடர்ந்து அமர்ந்திருந்து அந்தந்த நேரத்திலேயே குறுக்கிட்டு பல விளக்கங்களை அளித்திருக்கிற காரணத்தால் அவைகளை எல்லாம் திரும்பத் திரும்ப இங்கே எடுத்துக் கூற வேண்டிய அவசியமில்லை என்றே நான் கருதுகிறேன்.

இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற உணவுப் பிரசிச்னை உள்ளபடியே நாம் அனைவரும் சேர்ந்து வேதனைப்படத்தக்க ஒரு நிகழ்ச்சி என்பதை நான் மறுக்கவில்லை. அதற்கான நல்ல வழிவகைகளை, எப்படி இந்தப் பிரச்சினையிலிருந்து தமிழ் நாட்டைக் காப்பாற்றுவது என்பதற்கான அறவுரைகளை இந்த மாமன்றத்திலே நான் எதிர்பார்த்த அளவிற்கு பல கட்சிகளி னுடைய தலைவர்கள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள் என்பதை எண்ணி நான் அவர்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குற்றச்சாட்டுக்களைக் கூறுவது என்பது ஒன்று, குறைகளைச் சுட்டிக்காட்டுவது என்பது மற்றொன்று. குறைகள் குற்றங்கள் இரண்டுக்கும் இடையில் பெருத்த இடைவெளி இருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. குற்றங்கள் பெரும்பாலும் தெரிந்து செய்யப்படுகின்றவை. குறைகள் சில நேரங்களில் தெரியாமலே விளைந்துவிடுகிறவைகள். அவைகளை எடுத்துச் சொல்கிற நேரத்தில் திருத்திக் கொள்கிற மனப்பான்மை ஆளும் கட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு அது மிகமிகத் தேவைப்படுகின்ற