உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

உரை : 68

நம்பிக்கை இல்லாத் தீர்மானம்

நாள் : 17.08.1974

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : உடல் ஊனம் உற்றோர் நல்வாழ்வு நிதி, பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு நிதி, கண் ஒளி நிதி ஆகிய நல்ல காரியங்களுக்கு வசூல் செய்வதை தான் மறுக்கவில்லை என்றும், ஆனால் அந்த வசூலில் கெடுபிடி இருப்பதாகவும் காங்கிரஸ்கட்சித் தலைவர் அவர்கள் கூறியிருக்கிறார்கள். எந்த விதமான கெடுபிடியும் இதிலே கடைப் பிடிக்கப்படவில்லை. பொதுவாக இப்படி ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கு ஒரு ஏற்படுத்துவதற்கு யாரும் முனையக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். யாராவது அப்படி கெடுபிடி படுத்தப்பட்டு, அவரிடமிருந்து வசூலிக்கப்பட்டிருந்தால், தகவல் தருவார்களே யானால், அந்தப் பணத்தை அவர்களுக்கு திருப்பித் தருவதோடு, அப்படி கெடுபிடி செய்த அதிகாரிகளின் மீதும் இந்த அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

மாசு

பேரவைத் தலைவர் அவர்களே, ஆளும் காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் நண்பர் மாரிமுத்து அவர்கள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தேவையற்றது என்பதை எடுத்துக் கூறுகிற அளவில் நான் சில கருத்துக்களை மிகச் சுருக்கமாக இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்த நண்பர் மாரிமுத்து அவர்களும் அந்தத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய எதிர்க்கட்சியினுடைய உறுப்பினர்களும் இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் இன்றைக்குத் தமிழ்நாட்டில் நிலவுகிற உணவுப் பிரச்சினையைப் பற்றி விவாதிப்பதற்கு நாங்கள் இந்தப்