உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

241

தேர்தல் வரஇருக்கிறது. அங்கே உங்கள் தேர்தல் பிரகடனத்திலே, "நாங்கள் ஜெயித்தால் புதுச்சேரியிலே கள்ளுக் கடைகளையும் சாராயக் கடைகளையும் மூடுவோம்" என்று வீரமாக அறிவியுங்கள். வீரமாக அறிவித்து மற்றவர்களுக்கெல்லாம் வழி காட்டியாக வேண்டும். (சிரிப்பு)

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, நான், நாவலர், பேராசிரியர்அன்பழகன், என்.வி.என்., சத்தியவாணிமுத்து மற்றும் இங்கே அமர்ந்திருக்கிற கழக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ராஜினாமாச் செய்ய வேண்டுமென்று இரண்டு மூன்று நாட்களாகச் சொல்லிப் பார்த்துவிட்டீர்கள். நீங்கள் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டோம். மன்றாடியாரை விடுதலை செய்ய வேண்டுமென்றீர்கள்; விடுதலை செய்தோம். கன்னியாகுமரியில் கைதானவர்களையெல்லாம் விடுதலை செய்ய வேண்டுமென்றீர்கள்; விடுதலை செய்தோம் கன்னியாகுமரியில் கைதானவர்களையெல்லாம் விடுதலை செய்ய வேண்டுமென்று கேட்டீர்கள் ; 2 நாளைக்கு முன்பே விடுதலை செய்தோம். ஆனால், இதை மாத்திரம் கேட்க முடியவில்லை. வருந்துகிறோம் . வணக்கம்.

9-க.ச.உ.(அ.தீ.) பா-2