உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

சீமான்கள் அரசு என்பது சரிதானா? கோவையிலே நடந்த ஆலைத் தொழிலாளர்கள் போராட்டத்திலே அவர்களுக்கு வேறு எந்த மாநிலத்தினுடைய முதலமைச்சரும் முன்வராத அளவிற்கு அவர்கள் கஷ்டப்பட்ட காலத்தில் 6 இலட்சம் ரூபாயை முதலமைச்சர் நிதியிலிருந்து தந்தது இந்த அரசுதான், வேறு எந்த மாநிலத்திலும் வேலையில்லாமல் அவதிப்பட்ட தொழிலாளர் களுக்கு அந்த அரசு இப்படிப்பட்ட நிவாரண உதவியை அளித்தது இல்லை என்பதையும் நாம் நன்றாக உணர்வோம். நாடும் உணரும்.

அதுமாத்திரமல்ல. சிம்ப்சன் தொழிலாளர்கள் போராட்டம் எந்த அளவிற்கு வளர்ந்தது என்பதெல்லாம் தெரியும். அதற்குப் பிறகும் கூட அவர்கள் யாரும் பழிவாங்கப்படக் கூடாது என்ற கோரிக்கையின் அடிப்படையில் கிட்டத்தட்ட 120-க்கு மேற்பட்ட சிம்ப்சன் தொழிலாளர்களைப் பழி வாங்காமல் வேலைக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று உத்தரவு போட்டு, சிம்ப்சன் நிர்வாகத்தில் இருப்பவர்களுடைய மனக் கசப்பை இன்றைக்கு ஏற்றுக் கொண்டிருப்பதும் இந்த அரசுதான் என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் மறந்து விடக்கூடாது.

அண்மையில் கூட, நானும் தொழிலாளர் நல அமைச்சரும் கோவையில் அமர்ந்து, காலையிலிருந்து மாலை வரை அங்கிருக்கும் ஆலை ஆலை அதிபர்கள், நிர்வாகிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் பேசி எடுத்த முடிவு, மத்திய சர்க்கார் சட்டத்தால் ஏற்பட்டிருக்கும் பாதகங்களையும் மீறி இன்றைக்கு எடுத்த முடிவு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்காக டுக்கப்பட்ட முடிவே தவிர, சீமான்களுக்காகவோ, பெரிய பணக்காரர்களுக்காகவோ எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. கே.டி.கே. தங்கமணி : கோவை பஞ்சாலைத் தொழிலாளர்களுக்காக ஆறு லட்சம் ரூபாய் வரை கொடுத்ததை எல்லாத் தொழிற்சங்கவாதிகளும் பாராட்டினார்கள். அது இந்த முதலமைச்சர் அவர்கள் வருவதற்கு முன்னால் செய்ததாக ஞாபகம்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : திரு. தங்கமணி அவர்கள் எனக்கு ஒரு பெருமை சேர ஒத்துக்கொள்ள