கலைஞரின் சட்டமன்ற உரைகள்
281
மாட்டார்கள். எவ்வளவு பெரிய உள்ளம், பரந்த உள்ளம், அண்ணா முதலமைச்சராக இருந்தபோது ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். நான் முதலமைச்சராக இருந்தபோது ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தேன். தங்கமணி அவர்கள் காதில் விழ வேண்டுமென்று உரக்கச் சொல்கிறேன். அண்ணா வழியில் நடக்கவில்லை என்று சொன்னார்கள். கம்யூனிஸ்டு கட்சித் தலைவர், பெரிய தலைவர்கூட, "எங்களுக்கு என்ன கோபம்? கருணாநிதி மீது, நாவலர் மீது எல்லாம், அவர்கள் அண்ணா வழியில் நடக்கவில்லை” என்று பேசியதாக பத்திரிகைகளில் படித்தேன். அதுதான் உண்மை. 1967-ல் அண்ணா மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகளைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டார். 1971-ல் அவர் வழியில் நான் நடக்காமல் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியைக் கூட்டுச் டுச் சேர்த்துக் கொண்டேன். அந்தத் தவறுக்கான தண்டனையை அண்ணா இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். 'எங்களை மன்னித்துவிடு, அண்ணா' என்று மன்னிப்புக் கேட்பதைத் தவிர வேறு வழி இல்லை.
திரு. கே.டி.கே. தங்கமணி : அண்ணா வழியில் நீங்கள் நடக்கவில்லை என்று யார் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியாது. நாங்கள் அந்த மாதிரிச் சொல்லுவது கிடையாது எங்களுக்கு ஒரு வழி உண்டு. நீங்கள் உங்கள் வழியில் செல்லுகிறீர்கள். நீங்கள் அண்ணா வழியில் நடக்கவில்லை என்று நாங்கள் குற்றம் சாட்டவில்லை.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : ‘நீங்கள் அண்ணா வழியில் நடக்கவில்லை' என்ற குற்றம் சாட்டவில்லை என்று அவர் கூறினார்; ஆகவே அண்ணா வழியில் நாங்கள் நடக்கிறோம் என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார் அதற்காக நன்றி.
உரம் பற்றி இங்கு ஒரு விவாதம் நடைபெற்றது. அதிலே சில கருத்துக்கள் பரிமாறப்பட்டபோதே விவரங்களைப் பெற்று என்னுடைய பேச்சின்போது தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டேன்.
நண்பர் குருசாமி அவர்கள் பேசும்போது கூட்டுறவுச் சங்கங்களுக்கு உரம் வரவில்லை என்று குற்றச்சாட்டைச்