282
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
சொன்னார்கள். அப்போது வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் எந்தெந்தச் சங்கங்கள் என்று குறிப்பிட்டுச் சொன்னால் அந்தச் சங்கங்களுக்கு உடனடியாக உரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று சொன்னார்கள். அந்த விவரங்களை நான் பார்த்தபோது திரு. குருசாமி அவர்கள் குறிப்பிட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கு சுப்பலாபுரம், ஆண்டிப்பட்டி, ரங்கசமுத்திரம் என்றெல்லாம் இருக்கிற 14 கூட்டுறவுச் சங்கங்களில் செப்டம்பர் - அக்டோபர் மாதங்கள் வரை உரம் வழங்கப்பட்டிருக்கிறது என்ற கணக்கு இருக்கிறது. எந்தக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் உரம் வழங்கப்படவில்லை என்ற தகவல் இல்லை.
நண்பர் சீனிவாசன் அவர்கள் முக்கியமான கேள்வியை எழுப்பினார்கள். . .
திரு. நா.வெ. குருசாமி : கூட்டுறவுச் சங்கங்களுக்கு உரம் வரவில்லை என்று கூறவில்லை. விவசாயிகளுக்கு ஏன் ஒழுங்காக விநியோகிக்கப்படவில்லை என்றுதான் குறிப்பிட்டேன்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தரப்பட்டிருக்கிறது, விவசாயிகளுக்குத் தரவில்லை என்றால் புகார் செய்யுங்கள் என்று சொன்னார்கள்.
திரு. சீனிவாசன் அவர்கள் எவ்வளவு உரம் ஒதுக்கப் படுகிறது என்று கேட்டார்கள். வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு உரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றார்கள். எவ்வளவு என்று கேட்டதற்குத் தாராளமாக இருக்கிறோம் என்று சொன்னார்கள். நிலைமை என்ன? நமக்கென்று 1974-ம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உரம் மெட்ரிக் டன்களில் பார்த்தால் காரிப் பருவம், ராபி பருவம் இரண்டுக்கும் 2,92,029 டன். இது ஒதுக்கப்பட்டது. ஆனால் நமக்கு மத்திய சர்க்காரிலிருந்து அளிக்கப்பட்டது 1,30,500 டன்தான். ஒரு ஏக்கருக்கு விவசாயிக்கு எவ்வளவு தேவை என்று நண்பர் சீனிவாசன் அவர்கள் கேட்டார்கள். கிட்டத்தட்ட 75 கிலோ முதல் 100 கிலோ வரை தேவை. நாம் இன்றைக்குத் தனியார் தொகுப்பு அதைப்போல் அரசாங்கத் தொகுப்பு இந்த இரண்டிலும் இருந்து உரத்தை வழங்குகிறோம். அது ஒழுங்காக விநியோகிக்கப்பட