உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

283

வேண்டுமென்பதற்காக ஒரு கார்டு முறையை நாம் இன்றைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். கார்டுகளின் மூலம் கொடுக்கும் அளவு விவசாயிகளுக்குப் போதுமானதா என்றால் இல்லை. அந்தந்த மாவட்டங்களுக்கு ஏற்ற வகையில் அந்தந்த நிலைமைக்கேற்ற வகையில் 25 கிலோ 50 கிலோ என்ற வகையில் பிரித்துப் பருவங்களுக்கேற்றவாறு அதை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, விவசாயிகளுக்குப் போதுமான அளவுக்கு உரம் கிடைக்கிறது என்று நாம் திட்டவட்டமாகக் கூற இயலாது.

திரு. பெ. சீனிவாசன் : இராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக விருதுநகர், சாத்தூர் பகுதியில் வறட்சி ஏற்பட்டதன் காரணமாக வறட்சி நிவாரணத்திற்காகப் பணத்தை ஒதுக்கி யிருக்கிறார்கள். வறட்சி நிவாரணப் பணி நடைபெறுகிற இடத்தில் உரத்தைக் கொடுக்கக்கூடாது என்று விவசாய இலாகா உத்தரவிட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். ஸ்டாக் இருந்தும் கொடுக்க வில்லை. ஆங்காங்கு கிணற்றில் தண்ணீர் இருக்கும் அளவுக்கு விவசாயம் செய்வதற்கு உரம் கொடுக்கலாம் அல்லவா?

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி விவசாயத்தையே நடத்த முடியாத இடங்களில் உரத்தை வீணாக்க முடியாது. அங்கும் உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்குச் சாத்தியக் கூறுகள் இருந்தால் அவர்களை ஊக்குவிக்கின்ற வகையில் உரத்தை வழங்க அரசு நிச்சயமாக ஏற்பாடு செய்யும்.

மேலும் நமக்கு 35,000 டன்தான் கிடைக்கும். இப்போது 25,000 டன் அளவுக்குத்தான் இருக்கிறது. விரைவில் அது சம்பந்தமாக டில்லியோடு தொடர்புகொண்டு வறட்சியான இந்த நேரத்தில் ஒதுக்க டில்லி அரசு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளவும் அரசு தயாராக இருக்கிறது என்ற உறுதியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உணவுப் பிரச்சினையில் பல கட்சிகளின் தலைவர்களும், உறுப்பினர்களும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, தோழமைக் கட்சிகளின் சார்பிலும் கருத்துக்கள் எடுத்துச் சொல்லப்பட்டன. 12-ம் தேதி முன்வைத்த அறிக்கையின் அடிப்படையில் எடுத்துச் சொல்லப்பட்ட கருத்துக்களை எல்லாம் வைத்து இந்த நம்பிக்கை யில்லாத் தீர்மானம், கண்டனத் தீர்மானம் இவற்றையும் வாய்ப்பாகப்