உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

இதில் திரு. கே.டி.கே. பேசும்போது பழத்தோட்டம் போன்றவற்றுக்கு இருக்கிற விதிவிலக்கை நீங்கள் இன்னும் எடுக்கவில்லையே என்று கேட்டார்.

நம்முடைய மாநிலத்தில் பழத்தோட்டங்களின் மொத்த விஸ்தீரணமே 18,169 ஏக்கர்தான். எல்லாப் பழத்தோட்டங் களையும் சேர்த்து இந்தப் பழத்தோட்டங்களுக்கும் உச்சவரம்பு என்று கொண்டுவந்தால், அதனுடைய உற்பத்தி, கெடுவதோடு, வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும், அனுப்பப் படுகிற ஏற்றுமதியும் பாதிக்கப்படும். அதுவும் 18 ஆயிரம் ஏக்கராதானே விஸ்தீரணம்; குறைவாக இருப்பதால் விட்டு விட்டோம்.

அதற்கு உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் மைசூரில் கூட ஒரு ஆயிரம் ஏக்கராவிலே வாசனைப் பொருள் என்ற செடி வளர்க்கப்படுகிற இடம் இருக்கிறது. தேவிகாராணி என்கிற பழைய சினிமா நட்சத்திரம் ஒருவருக்குச் சொந்தமான இடம், அந்த ஆயிரம் ஏக்கராவில் வாசனைப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதற்காக அதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆயிரம் ஏக்கராவில்தான் வாசனைச் செடி உற்பத்தி செய்வதனால், அந்தப் பூமி அதற்கு ஏற்றதாக இருப்பதனால், அந்த வாசனைப் பொருளை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்பதற்காக, வெளி நாட்டுச் சந்தை பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, அங்கே அந்த ஆயிரம் ஏக்கராவுக்கு விதிவிலக்கு கர்நாடகத் தில் அளித்திருப்பதைப் போலத்தான், இங்கும் பழத் தோட்டங் களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறதே அல்லாமல் வேறு இல்லை.

நாம் எத்தனை விதிவிலக்குகளை ரத்து செய்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்ப்போம். கரும்பாலை நிலத்திற்கு விதி விலக்கு இருந்தது. அதனை ரத்து செய்திருக்கிறோம். அதைப் போலவே மேய்ச்சல் நிலத்திற்கு விதிவிலக்கு இருந்தது. அதனை ரத்து செய்திருக்கிறோம். பால்பண்ணை நிலத்திற்கு விதிவிலக்கு இருந்தது. அதனை ரத்து செய்திருக்கிறோம்.