உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

அண்மையில் மத்திய அரசு தயாரித்த ஒரு ஆய்வின்படி குடியானவர்களுக்கு வீட்டு மனைகள் வழங்கும் திட்டம், பீகார், குஜராத், ஜம்மு-காஷ்மீர், ஒரிசா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மட்டுமே குடியானவர்களுக்கும் உழவர்களுக் கும் வீட்டு மனை வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. நாம் குறிப்பிட்ட இந்த மாநிலங்களில் வீட்டு மனைகள் வழங்குகிற திட்டம் நடைபெற்று வருகிறது, இதில் தமிழ் நாட்டில் மாத்திரமே, குடியானவர்களுக்கும் உழவுத் தொழி லாளர்களுக்கும் வீட்டு மனைகள் இலவசமாக வழங்கப்படு கின்றன. மற்ற மாநிலங்களில் இந்த மனைகளைப் பெறுவதற்கு அதன் விலையை உழவர்கள் செலுத்தியாக செலுத்தியாக வேண்டும். 1971ஆம் ஆண்டில் தமிழ்நாடு குடியிருப்பு அனுபோகதாரர்கள் சட்டம் செய்தோம். 1975இல் அல்ல! 20 அம்சத் திட்டம் வானொலியில் அறிவிக்கப்பட்ட பிறகு அல்ல! 1971ஆம் ஆண்டிலேயே செய்தோம். இந்தச் சட்டத்தின் கீழ் குடியிருப்பு மனைகள் பெற்றவர்கள் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர்கள். இந்த ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர்கள் தாழ்த்தப்பட்ட பெருங்குடி மக்கள், 1,02,404 பேர்கள்; பிற்படுத்தப்பட்டோர்; 40,550 பேர்கள்; இதர வகுப்பினர் 32,123 பேர்கள்; இதற்காக அரசுக் குச் செலவு கிட்டத்தட்ட 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரை ஆகியிருக்கிறது.

அரசுக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து வீட்டு மனை ஒப்படை செய்யும் திட்டத்தின்கீழ் 1967க்கு முன் 20 ஆண்டு காலத்திலே, அப்போது இருந்த ஆட்சியில் வீட்டு மனை ஒப்படை செய்யப்பட்டது, பட்டா கொடுத்தது 3,770 பேர்களுக்கு ஆகும். ஆனால் இந்த எட்டாண்டுக் காலத்திலே பட்டா ஒப்படை செய்யப்பட்டது, பட்டா கொடுத்தது 5,03,697 பேர்களுக்கு ஆகும்.

அரிசன மக்களுக்கு மாத்திரம் நிலத்தை ஆர்ஜிதம் செய்து வீட்டு மனை வழங்கும் திட்டத்தின்கீழ் இதுவரையில் 2,36,000 அரிசனக் குடும்பங்கள் பயன் பெற்றிருக்கின்றன. அதற்காக ஆன மொத்தச் செலவு 4 கோடியே 25 லட்சம் ரூபாய் ஆகும்.