360
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
சுயாட்சியை எதிர்க்கின்ற அண்ணா தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் எல்லாம்கூட, அந்தத் தேர்தல் பிரகடனத்தை வைத்துத்தான் தேர்தலில் நின்று வெற்றி பெற்றனர். இந்திரா காந்தியோடு உறவாடிய நேரத்தில் நாம் நம்முடைய கொள்கையை இம்மியளவும் விட்டுக்கொடுக்கவில்லை. இந்தித் திணிப்பை நாம் ஏற்றுக்கொள்வோம் என்று சொல்லவில்லை.
அண்ணா மறைந்த பிறகுதான் திருச்சியில் நடைபெற்ற மகாநாட்டில், இந்திரா காந்தியோடு உறவு இருந்த நேரத்தில் “அண்ணா வழியில் அயராது உழைப்போம், இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம், வன்முறை தவிர்த்து, வறுமையை வெல்வோம், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்று ஐந்து பேரும் முழக்கங்களை அனைவரும் சேர்ந்து- இன்று பிரிந்து போய் இருக்கிற நண்பர்கள் உட்பட அத்தனை பேரும் சேர்ந்து- எழுப்பினோம்.
நம்முடைய கொள்கைகளை நாம் என்றைக்கும் அடகு வைத்தது கிடையாது. ஆனால் கண்ணியமற்ற முறையில் ஒரு கடுகளவும் பிரதமர் பற்றித் தி.மு.கழகத்தின் தலைவர்கள் யாரும், என்றைக்கும் விமர்சித்தது கிடையாது. கொள்கைகளை, எண்ணங்களை, நிலைகளை விமர்சிக்கிறோம்.
ஆகவே, இன்றைய இந்தக் கண்டனத் தீர்மானத்தை நானும் பயன்படுத்திக்கொண்டு, இந்திரா காந்தி அம்மையாரை இந்தச் சபையின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
அவசர நிலை பிரகடனத்தை உடனடியாகத் திரும்பப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு, தேசத்தலைவர்களை விடுதலை செய்து, சில கட்டுப்பாடுகள் தேவை என்று பிரதமர் சொல் கிறார்கள், அதற்கு யாரும் எதிரிகள் அல்ல, ஒழுங்கு, கட்டுப் பாடு இவைகள் எல்லாம் தேவைதான், அதற்கு இந்த அரசு ஒத்துழைக்கத் தயாராய் இருக்கிறது; பத்திரிகையின் நியாயமான சுதந்திரங்களை எல்லாம் தருகின்ற வகையில் விரைவிலே ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டுமென்று அம்மையார் அவர்களைக் கேட்டுக்கொண்டு, இவ்வளவு விளக்கங்களுக்குப் பிறகு இந்தக் கண்டனத் தீர்மானம் தேவையில்லை, அதனைத்