உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

395

முதலமைச்சர் அவர்களுக்கு, சாப்பாடு பரிமாற துணைவியாரை அனுப்பச் சட்டத்தையே மாற்றலாமா என்று யோசித்தவர், நாட்டில் இருக்கிற இலட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தால், புயலால் பாதிக்கப்பட்டிருக்கின்ற நேரத்தில் அவர்களுக்குச் சாப்பாடு போட, அவர்களுக்கு உடை வழங்கிட என்று சிறைச் சாலைக்கு அனுப்பப்படும் மணியார்டர்களைக் கருணாநிதி பெறக்கூடாது என்று இருக்கிற சட்டத்தை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டவேண்டிய அளவிற்கு, அவ்வளவு அவசியம் என்ன வந்துவிட்டது? என்று தயவுசெய்து எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனவேதான் பல நேரங்களிலே இப்படியெல்லாம் புண் படுத்தப்பட்ட காரணத்தினால்தான் வேறு வழியில்லாமல், மேதகு ஆளுநர் அவர்களிடத்திலே நிதியினை அளிக்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். பேராசிரியர் அவர்களே சுட்டிக்காட்டியதைப்போல, “சீப் மினிஸ்டர்' ஸ் ரிலீஃப் பண்டு" என்றுதான் கொடுக்கப்பட்ட செக்கில் போட்டிருக்கின்றது என்று கவர்னர் அவர்களிடத்திலே சொல்லிவிட்டுத்தான் அதை அவர்களிடத்திலே அளித்தோம். எங்கள் மாநில உரிமையை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்பதற்கு அடையாளமாக, எடுத்துக்காட்டாக இப்படிப் போட்டிருக்கிறோம் என்று ஆளுநர் அவர்களிடத்தில் எடுத்துச் சொல்லித்தான் அதை அவர்களிடம் கொடுத்தோம். ஆகவே, மாநில உரிமைகளைப் புறக்கணிப்பது என்கின்ற எண்ணம் கிஞ்சிற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக் கிடையாது என்பதனை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

நாங்கள் சிறைச்சாலையில் இருந்தோம். ஏன்? திருமதி இந்திரா காந்தி அவர்களுக்குக் கருப்புக்கொடி காட்டினோம் என்பதற்காக. திருமதி இந்திரா காந்தி அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்டுவது என்பது ஜனநாயகத்திலே ஏற்கப்பட்டதென்று அரசும் அறிவித்து, அதற்கு அனுமதியும் கொடுத்தது. அதற்குப் பிறகு மதுரை நகரிலே நடைபெற்ற சில சம்பவங்களையொட்டி, திடீரென்று தடை உத்திரவு என்று பிறப்பிக்கப்பட்டது. மதுரையில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி திருச்சிக்கு எட்டாத