28
அக்கரையிலுள்ள சிறு கிராமத்தில் எவனே ஒரு 'கேடிப் புள்ளி பதுங்கியிருக்கிறான் என அறிந்து, அவனே வேட்டையாடிப் பிடித்து வரப்போன போலீஸ்காரர்களும் ஏட்டய்யாவும் இன்ஸ்பெக்டரும் - மொத்தம் எட்டுப் பேர் மெதுநட நடந்து திரும்பிக் கொண்டிருந்தனர். மணலைக் கடந்து இக்கரை வந்து ஒற்றையடிப் பாதையில் கால் வைத்தபோது ஏதோ சலசலப்பும், 'இன்னும் கொஞ்சம் தள்ளிப் போய் கொண்டு போடலாம்' என்ற மனிதக் குரலும் அவர்கள் கவனத்தைக் கவர்ந்தன. கூர்ந்து கவனித்த ஏட்டய்யா ரெண்டு பேர் சேர்ந்து எதையோ தூக்கிக்கிட்டுப் போறாங்க எசமான்' என்றார், எல்லோரும் மெதுவாக நடந்து நெருங்கினர். செடி தழைகள் காலில் மிதிபடும் ஒசை கேட்டு அந்த இரண்டு பேரும் திரும்பிப் பார்த்தார்கள். கையிலிருந்த சுமையை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பியோட முயன்றார்கள். ஆனால் விடவில்லை. இவர்கள் சுற்றி வளைத்து மடக்கி இாண்டு பேரையும் பிடித்து விட்டார்கள். ஒன்று பங்களாவின் பெரிய மனிதான ருத்ரமூர்த்தி தான். மற்றது அவரது கார் டிரைவர் தான். கொடிச் சமாதியில் அவர்கள் அடக்கம் செய்ய விரும்பியது ஒரு பெண் உடல் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடற்கட்டு வாய்ந்த நாடோடிப் பெண் எவளோ ! இன்ஸ்பெக்டர் அந்த உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, அவ் விருவரையும் கைது பக்களாவைச் சோதனையிட இட்டுச் சென்றார். அவர்களுடன் மூன்று போலீஸ்காரர்களும் போனார்கள். அறை அறையாகச் சோதனை போட்டதில் புதிதாக எதுவும் அகப்பட்டுவிடவில்லை. ருத்ரமூர்த்தி தனது 'ஆராய்ச்சி அறை'என்று குறிப்பிட்ட அறைதான் குமாரி பவானி வர்ணித்த சூழ்நிலை என்று தெரிந்தது. அங்கு ரசாயனக் கருவிகளும் கண்ணாடிபாட்டில்களும் வேறு பல விதச் சாமான்களும் இருந்தன. மேஜை அருகில் தரைமீதிருந்த