உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

காந்தியடிகள் அப்போதே அந்த வைஸ்ராய் சொன்னதற்கு பதில் அளித்து இருக்கிறார். இதைச் சொல்கிற காரணத்தால் காந்தியடிகள் காலத்தில் வன்முறை நடைபெற்றது. இப்போது நடைபெறக் கூடாதா என்று நான் வாதிடுவதாக தயவுசெய்து யாரும் கருதிடத் தேவையில்லை.

பெரும் தலைவர் காமராஜ் அவர்கள் நடத்திய போராட்டம் பற்றி நண்பர்கள் எடுத்துக்காட்டினார்கள். அவர்கள் நடத்திய போராட்டம், அவர்கள் நடத்திய பேரணி வன்முறை இல்லாமல் நடைபெற்றது என்று சொன்னார்கள். அந்தப் பேரணியில் சென்னை மாநகர வீதியில், அண்ணா சாலையில் காமராஜர் முன் அமர்ந்து ஊர்வலம் சென்றபோது பின்னால் வந்த ஊர்வலப் பகுதியினர் பல தியேட்டர்களை அடித்து நொறுக்கி பெரும் சேதத்தை விளைவித்தார்கள் என்ற செய்தியும் மறுநாள் பத்திரிக்கையில் வந்தது. அதற்கு பெரும் தலைவர் காமராஜ் பொறுப்பாளி என்று சொல்லமாட்டேன்.

அது மாத்திரமல்ல. மதுவிலக்கை மீண்டும் அமல் நடத்த வேண்டுமென்று அவர் நடத்திய போராட்டமானாலும், விலைவாசி உயர்வைக் கண்டிக்கும் போராட்டமானாலும், அந்தப் போராட்டங்கள் இத்தனை நாள் நடைபெறுகிறது என்று தெரிந்து கொண்டு, அத்தனை நாள் அவர்கள் சிறையில் வைக்கப்பட்டார்கள். 12-13 நாள் போராட்டம் நடத்தினார்கள் என்றால், போராட்டம் முடிந்ததும் விடுவிக்கப்பட்டார்கள், அதற்கிடையில், திருச்சி சிறைச்சாலையில் இருந்த காங்கிரஸ் காரர்கள் அங்கே இருந்த வார்டர்களோடு ஒரு அமளியில் ஈடுபட்டு அங்கே இருந்த டவர்-கோபுரம்-அந்த சிறைச்சாலைக் குள்ளே இருந்த டவர் பகுதிக்குச் சென்று, அங்கே மேலே ஏற்றப்பட்டு இருந்த தேதியக் கொடியைச் சுழற்றி ஏறிந்து விட்டு, காங்கிரஸ் கட்சியின் கொடியை டவரில் பறக்க விட்டார்கள். அப்படி செய்ததற்காக 50 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கைக்கூட திராவிட முன்னேற்றக் கழகம் திரும்பிப் பெற்றுக் கொண்டது என்ற அந்தச் செய்தியையும் நான் இங்கே தெரிவிக்கக் கடமைப்பட்டு இருக்கிறேன்.