கலைஞரின் சட்டமன்ற உரைகள்
425
கொடுப்பதற்கு விமான நிலையத்திற்குச் சென்றார்களே தவிர, அந்த கறுப்புக் கொடி காட்டிய இடத்தில் கூடி இருக்கவில்லை என்று நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: அவர் தரப்பு வாதம் அவர் எடுத்து வைக்கிறார். எனக்குத் தெரிந்த உண்மையை நான் சொல்கிறேன், அவ்வளவுதான், ஒரு போலீஸ் அதிகாரி கூட காங்கிரஸ்காரர்கள் ஜீப்பில் மிளகாய்பொடி இருந்தது என்று சொல்லி, அது பத்திரிகையில் வந்து இருக்கிறது. பிறகு என்ன காரணமோ, 2 நாள் கழித்து நான் அப்படிச் சொல்லவில்லை என்று மறுப்பு அறிக்கை விட்டு விட்டார்கள். இடையில் நடந்தது என்ன என்று ஆராய நான் விரும்பவில்லை. அதைப்பற்றிய சர்ச்சைக்கும் நான் வர எண்ணிடவில்லை.
,
கழகம் வன்முறையில் நம்பிக்கை அற்றது என்பதையும் வன்முறையை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளாது என்பதையும் இன்றல்ல, பேரறிஞர் அண்ணா அவர்கள் காலத்தில் இருந்தே எடுத்துச்சொல்லி, நாங்கள் செயல்பட்டு வந்து இருக்கிறோம். ஆனால் வன்முறை சில நேரங்களில் தவிர்க்க முடியாததாகி விடுகிறது என்பதை இப்போது நடைபெற்ற போராட்டங்களில் மாத்திரம் அல்ல, உலக உத்தமர் அமைதியின் சொரூபம், காந்தியடிகள் நடத்திய சௌரி சௌரா போராட்டத்தில் ஒரு போலீஸ் ஸ்டேனுக்கு தீ வைக்கப்பட்டு, அந்த காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவலர்களும் தீயினால் இறந்தார்கள் என்று வன்முறை சம்பவம் காந்தி அடிகள் காலத்திலேயே நடைபெற்று இருக்கிறது.
அதைப்போலவே, 'வெள்ளையனே வெளியேறு' என்று காந்தியடிகள் போராட்டம் நடத்திய நேரத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்கு எல்லாம் காந்தியடிகள்தான் காரணம், அவர்களுடைய பேச்சும் எழுத்தும்தான் காரணம் என்று அப்போது வைஸ்ராய்யாக இருந்த லார்ட் லின்லித்கோ தெரிவித்தார். அந்த வைஸ்ராய் சொன்னதற்கு காந்தியடிகள் பதில் தந்தார் “என்னையும் மற்ற காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்த காரணத்தால் மக்களுடைய மக்களுடைய உணர்ச்சிகள் தூண்டப்பட்டு அதன் காரணமாக வன்முறை ஏற்பட்டன” என்று