424
அம்மையாரை
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
சொன்னார்கள். ஆனால் நம்முடைய மாரிமுத்து அவர்களின் கணக்குப்படி 3,000. ஆனால் விமான நிலையத்தில் வரவேற்க வந்தவர்கள் லட்சம் பேர். கறுப்புக்கொடி காட்டியவர்கள் 3000 என்று சொன்னார்கள். அந்த மக்கள் தொகை எண்ணிக்கை கட்சிக்கு கட்சி, பத்திரிகைக்குப் பத்திரிகை வேறுபடும். அதிலே நுழைந்து நாம் ஆராய்ச்சி நடத்தத் தேவையில்லை. என்ன நடந்தது? திராவிட முன்னேற்றக் கழகத்தாரும் மற்றவர்களும் எங்கே கறுப்புக்கொடி காட்டுவதற்கு இடம் அளிக்கப்பட்டதோ அந்த இடத்திற்கு அருகாமையிலேயே இந்திரா காந்தியை வரவேற்க காங்கிரஸ் கட்சிக்கும் இடம் ஒதுக்கப்பட்டது.
மிக மிக அருகாமையில் இடம் ஒதுக்கப்பட்ட நேரத்தில், ஜீப்பில் ஏறிக்கொண்டு மதுரையில் இருக்கும் காங்கிரஸ்காரர்கள், சில முக்கியமான பிரமுகர்கள் ஜீப்பில் ஏறிக்கொண்டு அங்கும் இங்கும் செல்லுவது, கறுப்புக்கொடி ஏந்தி நிற்கும் கழகத் தோழர்களைப் பார்த்து கேலி புரிந்து, என்று இப்படிப்பட்ட சேட்டைகளில் அவர்கள் ஈடுபட்ட காரணத்தால் சில குழப்பம், குமுறல் வெடித்து, குமுறி, ஒரு சூழல் ஏற்பட்டபோது மதுரை மாவட்டச் செயலாளர் பொன். முத்துராமலிங்கம் அவர்கள் போலீஸ்காரர்களே கேட்டுக்கொண்ட காரணத்தால் நீங்கள் அமைதியாக இருங்கள் என்று கறுப்புக்கொடி காட்ட இருந்த தோழர்களிடத்தில் பலமுறைசென்று அவர்கள் அறிவிப்பு செய்து இருக்கிறார்கள். அந்த அளவிற்கு அமைதியாக நடக்க வேண்டுமென்று மதுரை மாவட்ட தலைவர்களும், மற்ற மாவட்டத்திலிருந்து வந்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும், அந்தந்தப் பகுதி தலைவர்களும் அக்கறை காட்டினார்கள். மிளகாய்ப்பொடி தூவவில்லை என்று மாரிமுத்து அவர்கள் சொன்னார்கள்.
திரு. ஏ. ஆர். மாரிமுத்து : நான் மீண்டும், மீண்டும் எதிர்கட்சித் தலைவருக்குச் சொல்லிக் கொள்கிறேன். கறுப்புக் கொடி காட்டுவதற்கு திராவிட முன்னேற்றக் கழக தோழர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் காங்கிரஸ்காரர்கள் அனுமதிக்கப் படவே இல்லை. இந்திரா காந்தி அம்மையாருக்கு வரவேற்பு