434
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
ஆதாயம் பெற்றார்கள். இன்று இந்தியாவில் ஜனநாயகம் வந்த நேரத்திலும் சர்வாதிகார முறையில் தமிழகத்தை ஆளுகின்ற ஒரு மனப்பான்மையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். 'One cannot eat the cake and keep it also' என்பது போல அப்பத்தை அருந்தி விட்டு அதை அப்படியே வைத்திருக்கவும் முடியாது என்று சொல்லுவார்கள். ஆனால், சர்வாதிகார ஆட்சியிலும் இன்றைக்கு இருக்கின்ற ஆளும் கட்சிக்காரர்களுக்கு லாபம். இன்றைக்கு இந்தியாவில் நடைபெறுகிற ஜனநாயக ஆட்சியிலும் தமிழ்நாட்டை ஒரு சர்வாதிகாரத் தீவாக வைத்துக்கொண்டு லாபம் பெறுகிற ஒரு நிலை இருக்கிறது.
இல்லை என்றால் இந்த வழக்குகளுக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் அலுவலகத்திற்குள் நுழைந்து, அறிவகம், அன்பகம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற கட்சி அலுவலகம் இவைகளிலெல்லாம் நுழைந்து அங்கு இருக்கின்ற கணக்குப் புத்தகங்கள் எடுத்துச்செல்லப் பட்டிருக்கின்றன; செயற்குழு, பொதுக்குழு மினிட்ஸ் புத்தகங்கள் எடுத்துச்செல்லப்பட்டு இருக்கின்றன. இது நெருக்கடி காலத்தில் இந்திரா காந்தி அம்மையாரால் தொடங்கி வைக்கப்பட்ட ஒரு காரியம். இன்று நெருக்கடி தீர்ந்த பிறகும் இந்தியாவில் ஜனநாயகம் இருப்பதாக எண்ணுகின்ற நேரத்தில் ஒரு கட்சி அலுவலகத்தில் போலீசார் நுழைந்து அந்த கட்சியின் கணக்கு ஏடுகளை, என்றைக்கோ நடந்து முடிந்த தேர்தலுக்குச் செலவான கணக்குகளைக் கொண்ட ஏடுகளை இந்த வழக்கோடு சம்பந்தப் படுத்த எடுத்துச்சென்றிருக்கிறார்கள் என்றால் அதை நான் மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன். செயற்குழு மினிட்ஸ் புத்தகம், பொதுக்குழு மினிட்ஸ் புத்தகம் இவைகளை எடுத்துச்செல்கிற அளவிற்கு இங்கே நெருக்கடி நிலையினைப் போன்ற ஒரு ஆட்சி நடக்கிறதென்று சொல்ல வேண்டியிருக்கிறது.
திரு. மாரிமுத்து அவர்கள் சொன்னார்கள், கறுப்புக் கொடியை இந்திரா காந்தி அம்மையாருக்கு எதற்காக காட்ட வேண்டும் என்று கேட்டு விட்டு, அதற்கு உள் நோக்கம், இரண்டு காரணங்களையும் சொன்னார்கள். ஒன்று, இந்த அரசை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கம் என்று சொன்னார்கள். நான் நண்பர்