உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

433

என்ற பெயரால், டெபுடி கமிஷனர் ஒருவர் இருந்தார். நகர் முழுவதுமே அவசரகால நிலை இருந்தது போலவும், போலீஸ் அதிகாரிகள் மட்டும் செல்ல வாய்ப்பு உள்ளவர்களாக இருந்தது. அரசிடமிருந்து அடையாளச் சீட்டு வாங்கிய பத்திரிகை யாளர்கள் கூட அங்கே அனுமதிக்கப்படவில்லை”. இது டில்லியில் இருந்து வரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி. இங்கே உள்ள எக்ஸ்பிரஸ் அல்ல.

அதுபோலத்தான் டைம்ஸ் ஆப் இந்தியாவும், இரண்டு நாட்களுக்கு முன் நிதியமைச்சருக்கு, புயல் நிவாரணப் பணிகள் பற்றி புகழ் ஆரம் சூட்டி இருக்கிறது, என்று எடுத்துப் படித்துக் காட்டினார். அந்தப் பத்திரிக்கை என்ன சொல்லுகிறது என்றால், தமிழ்நாட்டில் திருமதி இந்திரா காந்தி சென்ற இடமெல்லாம் ஏற்பட்ட வன்முறைகளைப் பரந்த அளவில் ஏற்பட்ட கலவரங்களைப் பார்க்கிற போது, அவற்றை இங்கே இருக்கிற மக்களின் வெறுப்பிற்கு அடையாளம் இல்லை என்று விலக்கி விட முடியாது. இந்திரா காந்தியின் அதிகாரபூர்வமான ஆசீர்வாதத்தோடு காட்சியளித்த மக்களிடையே எத்தகைய கடுங் கோபத்தை இது ஏற்படுத்தும் என்பதை தமிழ் நாட்டின் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உணரவில்லை. “டைம்ஸ் ஆப் இந்தியா” தலையங்கம், பம்பாய் 8-11-1977-ல் இன்றும் இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? ஜனதா கட்சியோடு உறவும், அதே நேரத்தில் இந்திரா காந்திக்கும் அவர் பிரதமராக இருந்த காலத்தில் தந்ததைப் போன்று மாபெரும் வரவேற்பு நான் கேள்விப்படுகிறேன் இந்திரா காந்தியை டில்லியில் நமது முதலமைச்சர் சந்தித்த நேரத்தில் என்னுடைய நண்பர்கள் பலம் உள்ளவர்களாக இருந்தால்தான் எனக்குப் பயப்படுவார்கள். எனவே எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர்களிடம் நேரடியாக இப்போது பகைத்துக் கொள்ளாதீர்கள். நட்பாக இருங்கள் என்று அந்த அம்மையார் சொன்னதாக கேள்விப் பட்டோம். அது உண்மையோ அல்லவோ. நடைமுறையைக் காண்கின்ற நேரத்தில் அப்படிச் சொல்லி இருக்கக் கூடும் என்ற சந்தேகம் கூட எனக்கு எழுகிறது. இல்லாவிட்டால், சர்வாதிகாரம் நடைபெற்ற நேரத்திலும் இன்றைய ஆளும் கட்சிக்காரர்கள்

15-க.ச.உ.(அ.தீ.) பா-2