உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

தான் 307-வது பிரிவு அங்கிங்கெனாதபடி எங்கும் இன்று போடப்படுகின்றது. மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் சரண்சிங் அவர்கள் இரண்டு மூன்று முறை எச்சரித்து இருக்கிறார். காவல் துறைக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். சட்ட விரோதமான உத்தரவுகளை போலீசார் நிறைவேற்றத் தேவை இல்லை என்ற அளவுக்கு இன்றைய மத்திய உள்துறை அமைச்சர் சரண்சிங் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

ஆனால், இன்றைக்கு எத்தனை பொய் வழக்குகள் 307-வது பிரிவின் கீழ் தி.மு.க.வினர் மீது போடப்பட்டிருக் கின்றன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். கொலை முயற்சிக்குச் சதித் திட்டம் என்று வழக்கு. சதிசெய்வது என்பது, கொலை செய்ய சதி செய்தார்கள் என்றிருக்கும். கொலை முயற்சிக்குச் சதித் திட்டம் என்ற வகையில் எங்கள் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது. குற்றப்பத்திரிகை இன்னமும் தாக்கம் செய்யப்படவில்லை. அது தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிற நேரத்தில், பல விஷயங்கள் வெளிவர இருக்கின்றன.

-

ஆனால் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி நாங்கள் மாத்திரமல்ல. இங்கே உள்ள ஏடுகள் மட்டுமல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற இங்கே உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸை சொல்லவில்லை என்ன காரணமோ, இங்கே அந்தச் செய்தி வெளியிடப்படவில்லை - டில்லியிலுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில், இந்திரா காந்தி வந்திருந்தபோது போலீசார் நடந்து கொண்ட விதத்தை எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். "இந்திரா காந்திக்குக் கொடுக்கப்பட்டிருந்த போலீஸ் பந்தோபஸ்து, அவர் அவசர நிலையின்போது முடிசூடா மகாராணியாக வந்தபோது இருந்ததைவிட பன்மடங்கு அதிகமாக இருந்தது. அன்று காலை 6 மணி முதல் எழும்பூர் ஸ்டேஷனை வளைத்துக் கொண்டு, உள்ளே இருந்து யாரும் வெளியில் செல்லவும், வெளியிலிருந்து யாரும் உள்ளேயும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. எழும்பூர் இரயில் நிலையமே போலீசாரால் வளைத்துக்கொள்ளப்பட்டு, ஸ்டேஷன் முன் செல்ல எவரும் அனுமதிக்கப்படவில்லை. பந்தோபஸ்து