கலைஞரின் சட்டமன்ற உரைகள்
431
தோழர்கள் ஊனமுற்றிருக்கிறார்கள். 144 தடை உத்தரவு போடப்பட்டது உண்மை. நான் கேட்பதெல்லாம் 144 தடை உத்தரவு என்றால் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கு மாத்திரம் தானா? 144 தடை உத்தரவில் காங்கிரஸ் கட்சிக்கு விதி விலக்கு அளித்துள்ளார்களா ? 144 தடை உத்தரவை போடும்பொழுது 5 பேருக்கு மேல் போகக்கூடாது அல்லது 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடக்கூடாது என்கிற பொதுவான உத்தரவு பிறப்பிப்பார்கள். அதற்கு விதிவிலக்கு போடுவார்கள் என்றால், சவ ஊர்வலம், கல்யாண ஊர்வலம், மதச் சடங்குகளுக்கு 144 உத்தரவில் விதிவிலக்கு இருக்கும். ஆனால் இங்கே திராவிடர் கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 144 தடை உத்தரவைப் போட்டுவிட்டு, காங்கிரஸ் கட்சி கூட்டம் நடத்தலாம், காங்கிரஸ் கட்சியின் ஊர்வலம் நடைபெறலாம் என்கிற அளவிற்கு நிலைமையை உருவாக்கினார்கள். இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் திருமண விழாவிற்கு தலைமை வகிக்க வந்திருப்பார்களேயானால் நான் இந்தப் பிரச்சினையை எழுப்ப மாட்டேன். சவ ஊர்வலம் ஏதாவது நடைபெற்றதா என்றால் அந்தச் சவ ஊர்வலம் எங்கள் கட்சியின் சார்பில் செத்துப்போன தீனன், பாபு ஜனதாக் கட்சியைச் சேர்ந்த குண்டடிப்பட்ட சுப்பிரமணி ஆகியோருக்கு சவ ஊர்வலம் நடைபெற்றது. அல்லது காங்கிரஸ் கட்சி மத ஸ்தாபனமா என்றால் அதுவும் இல்லை.
இந்த மூன்றிலும் இடம் பெறாத ஒரு கட்சிக்கு 144 பொது உத்தரவில் எப்படி தனியாக ஒரு விதி விலக்கு அவர்களுக்குத் தரப்பட்டது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. இப்படி மக்களின் உரிமைகளை, தங்கள் இஷ்டத்திற்கு பாரபட்சமான நிலையில் அவர்களுடைய உரிமைகளைப் பறித்துக்கொள்ளுகிற ஒரு போலீஸ் ராஜ்யம் என்று பெயர் சூட்டத்தக்க அளவுக்கு இந்திரா காந்தி அம்மையார் இங்கே வந்த நேரத்தில் நடைமுறைகள் இருந்தன என்று சொன்னால் அது தவறாகாது என்பதே என்னுடைய கருத்தாகும். அதற்கெல்லாம் சிகரமாகத்