உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

449

தமிழ்நாடு ரீஜினல் கமிட்டி முன்பு ஒரு மாதத்திற்கு 12,700 கிலோ ஒதுக்கியது. ஆனால் அசிஸ்டென்ட் டைரக்டர் ஆப் ஹாண்ட்லூம்ஸ் இப்போது ஒதுக்கியிருப்பது 23,610 கிலோ அதிகமாக 10,910 கிலோ. இதிலே மாத லாபம் 65,640 ரூபாய் வரும். இதிலே தங்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை என்று ஏழை விசைத்தறியாளர்கள் இப்படி யாருக்கோ அதிகப்படுத்திக் கொடுத்துவிட்டார்கள், எங்களுக்குக் கதிர்கள் கிடைக்கவில்லை, நூல் கிடைக்கவில்லை என்று முன்சீப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள் என்று அறிகிறேன். இங்கே எந்தச் செல்வாக்கு பயன்பட்டது? அமைச்சரின் செல்வாக்கா? ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களின் செல்வாக்கா என்பதை முதலமைச்சர் அவர்கள் ஆராய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். யார் யார் ஈடுபட்டு குமாரப்பாளையம் சம்பவம் நடைபெற்றிருக்கிறது, எப்படிப்பட்ட சிபாரிசுகள் சென்றிருக்க வேண்டுமென்பதை எண்ணிப்பார்க்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இன்னொரு மிக முக்கியமான பிரச்சினையைச் சொல்ல விரும்புகிறேன். இந்த அவையிலும் சரி, வெளியிலும் சரி நம்முடைய அமைச்சர் பெருமக்கள் பேசுகின்ற பேச்சுக்கள் முதலில் ஒன்று பேசுவது; மீண்டும் மறுப்பது என்ற முறையில் தான் அமைந்து கொண்டு போகின்றன; நேற்றைக்குக்கூட இந்த அவையில் நம்முடைய உணவு அமைச்சர் எட்மண்ட் அவர்கள், வேணுகோபால் என்ற ஒருவருக்கு, மீனவர் அல்லாதவருக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஒரு விசைப்படகு ஒதுக்கினார்கள் என்று சொன்னார்கள். கூத்தக்குடி சண்முகம் அவர்கள் எழுந்து “எல்லோர் பட்டியலையும் தர முடியுமா?” என்று கேட்டார். நான் எழுந்து “எந்த ஆண்டு” என்று கேட்டேன். தலைவர் அவர்களே, உங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். 1972ஆம் ஆண்டு என்று அவர் சொல்லவில்லை; அவர் சொன்னதெல்லாம் 1969-ல் இருந்து 1976 வரையில் நடைபெற்ற தி.மு.க. தி.மு.க. ஆட்சியில் என்றார். நான்கூட வேடிக்கையாக சொன்னேன், “அண்ணா ஆண்ட இரண்டாண்டு தி.மு.க. ஆட்சி என்று ஒத்துக்கொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது” என்று சொன்னேன். இதிலே