உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

66

எட்மண்ட் சொன்னார் அண்ணா ஆண்ட இரண்டு ""ஆண்ட வருஷங்களும் புனிதமான ஆண்டுகள். அதற்குப் பிறகு 1969-ல் இருந்து 1976 வரையிலும் உள்ள காலத்தில்தான் தவறு நடைபெற்றிருக்கிறது; தகுதியற்ற ஒருவருக்குத் தரப்பட்டிருக்கிறது" என்று குறிப்பிட்டார். திரும்பத் திரும்ப நாங்கள் கேட்டோம். அந்தப் பட்டியல்களை வெளியிட முடியுமா என்று கேட்டோம். அப்போது திரும்பத் திரும்ப 1969 முதல் 1976 வரை என்றுதான் சொன்னாரே தவிர 1972ஆம் ஆண்டு என்று அவருடைய நாவால் உச்சரிக்கப்படவில்லை. ஆனால் இங்கே அவர்கள் தனக்கு எழுதிக்கொடுத்த கடிதத்தில் அச்சுப்பிழை நேர்ந்து விட்டது '62 என்பது 72 என்று போட்டு விட்டார்கள்' என்று எழுதியதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது.

நான் கேட்கிறேன். அறுபத்திரண்டோ எழுபத்திரண்டோ இங்கே பேசப்பட்டதா? ஆனாலும் தவறாகச் சொல்லிவிட்டு வீண் பழி சுமத்துகிற எண்ணத்தில் என்மீது குறை சொல்லி விட்டு, நாங்கள் இறுக்கிப் பிடித்துக் கேட்கிற நேரத்தில் நான் இப்படிச் சொன்னேன், அப்படிச் சொன்னேன் என்று சமாளிப்பது அமைச்சர்களுக்கு அழகல்ல என்பதைச் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். சொன்னால் திருந்திக் கொள்கிறோம், சொன்னால் திருந்திக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். திரு. எட்மண்ட் அவர்கள் சொன்னார்கள், பாலசுப்பிரமணியம் என்பவரைத் தான் அப்படிச்சொல்லிவிட்டேன் என்கிறார். வேணுகோபால் என்பதற்கும் பாலசுப்பிரமணியம் என்பதற்கும் வேறுபாடு தெரியாமல் சொல்லியிருக்கிறாரா? அந்த பாலசுப்பிரமணியமே எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டி ருக்கிறார், "ஆறாம் தேதி அன்று சட்ட மன்றத்தில் மாண்புமிகு எதிர்க் கட்சித்தலைவர் அவர்கள் மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் அவர்கள்மீது கொண்டுவந்த உரிமைப் பிரச்சினைக்குப் பதிலளிக்கையில் பாரிக் கம்பெனியில் பணிபுரியும் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு விசைப்படகு வழங்கப்பட்டுள்ளது. அவர் மீனவர் அல்லாதவர். அந்தத் தொழிலுக்கே செல்லாதவர் என்று தெரிவித்து இன்று காலை