கலைஞரின் சட்டமன்ற உரைகள்
உரை : 75
கண்டனத் தீர்மானம்
511
நாள் : 03.11.1979
கலைஞர் மு. கருணாநிதி: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே! எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் பேராசிரியர் அவர்களால் முன்மொழியப்பட்டு, இந்த மன்றத்திலே உள்ள இந்திரா காங்கிரஸ் கட்சியினுடைய உறுப்பினர்களாலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய உறுப்பினர்களாலும் ஆதரிக்கப்பட்டு, இந்த மன்றத்திலுள்ள பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதுபற்றிய கருத்துக்களை எடுத்துக்கூறி, இன்று விவாதத்தின் இறுதிநாளாக அமைந்துள்ள கண்டனத் தீர்மானத்தின்மீது என்னுடைய கருத்துக்களைச் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
நான் இந்தக் கண்டனத் தீர்மானத்தில் பல குற்றச்சாட்டு களை இந்த அரசின்மீது நல்ல விளக்கத்தோடும், ஆதாரங் களோடும் எடுத்துவைப்பது எதிர்க்கட்சிக்குள்ள உரிமை, கடமை என்கிற அளவில் முன் வைக்கிறேன்.
1977-78ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் (சுமார் அல்லது சரியாகச் சொல்லப்போனால் ரூ.199 கோடியைச் சட்டச்சபையின் அங்கீகாரம் பெற்று இருந்தும்கூட செலவு செய்யப்படவில்லை என்பதை Report of the Controller of expenditure, Controller and Auditor General of India குறிப்பிட்டு இருப்பதை நான் இங்கே கோடிட்டு காட்டாமல் இருக்க இயலாது.
அதிலே எவ்வளவு முக்கியமான இனங்கள் செலவு செய்யப்படாமல், இன்றியமையாத இனங்கள் செலவு செய்யப்படாமல், ஒதுக்கப்பட்ட பணம் அப்படியே இருக்கிறது