உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

பொன்னையன்: எஃபக்டிவ் ஆக இருந்தது. எல்லா பேப்பரிலும் எடுத்து அருமையாகப் போட்டிருந்தார்கள். அதைப் படித்தவுடனே தி.மு.க. வினுடைய கலைஞருடைய உயிர் நாடியாக இருக்கிறவன் கூட, இப்படி ஒரு உள்ள உணர்வுடைய எம்.ஜி.ஆரை எதிர்த்தா ஒரு பந்த் நடத்துவது என்று மாறிவிடுவார். அப்படி அருமையாக அமைந்திருந்தது. அதனால் ‘பப்ளிக் ஓவர்வெல்மிங் சப்போர்ட்’ அதனால் போலீஸ்காரர்கள் ரொம்ப கோவாப்பரேட் பண்ணினாங்க.

பாபா: அப்படியா?

பொன்னையன்: அதுவும் சிட்டியில் போலீஸ் ரொம்ப ட்ரமன்டஸ்லி ஒர்க்ட். பரமகுரு லத்தியை எடுத்து அடிங்கடா என்று உத்தரவு போட்டார்...

(திரு. உமாநாத் அவர்களே, பொன்னையன் சொல்லு கிறார்) அவர்கள் லத்தியை எடுத்து அடிங்கடா என்று உத்தரவு போட்டார். அடியுங்கள். நொறுக்குங்கள் என்று உத்தரவு போட்டார்.

அவர் போட்ட அந்த ஸ்ட்ரிக்ட் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ன ஆயிற்று என்றால் அவர் இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி. ஏ.சி.டி.சி யை எல்லாம் மீட்டிங் போட்டுக் கூப்பிட்டு ஸ்ட்ரிக்டாகச் சொல்லிவிட்டார். எனக்கு வேண்டியது இந்த பந்த் உடைக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.

இப்படிப் பேச்சு வார்த்தை தொடர்ந்து கொண்டு போகிறது

இந்த பாபாதான் ஏற்கெனவே சென்னையில் 20-5-78 ஆம் தேதி பெரம்பூரிலுள்ள நசரத் சையத் ஹூசேன் ஷா கதிரி திம்மசாமி தர்கா என்று பெரிய தர்காவையும், மசூதியையும் புதுப்பிக்க அமைக்கப்பட்ட கமிட்டியில் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதையும் நான் இங்கே நினைவு

படுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

1979 மே மாதம் தஞ்சை நாகை இடைத் தேர்தலுக்கு முன்பு இந்த பாபா மீது முதலமைச்சருக்குக் கோபம் ஏற்பட்டது. பாபா என்ன செய்தார் தெரியுமா?