உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

527

சில ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு தொடர்பு கொண்டு, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தன்னுடைய சமூகநல இயக்கத்தின் சார்பாக நடத்தப்படும் விழாவுக்கு ஒரு மத்திய அமைச்சரை அழைக்க வேண்டு மென்று கேட்கிறார். இந்த டெலிபோன் செய்தி முதலமைச் சருக்குச் செல்லுகிறது. எனவே, 1979 மே 28 ஆம் தேதி பாபாவை இல்லத்திற்கு அழைக்கிறார். டேப் செய்யப்பட்ட செய்திகளை எல்லாம் போட்டுக் காட்டி பாபாவைக் கடுமை யாக எச்சரிக்கை செய்து அவரை வெளியேற்றுகிறார்.

ஆக, ஜனதா கட்சியினுடைய அமைச்சர் ஒருவரை அவர் அழைக்கிறார் என்ற காரணத்திற்காகப் பழனிபாபா கடுமையாக எச்சரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறார். அதனால்தான் இந்த எச்சரிக்கைகள் எல்லாம். அதற்குப் பிறகு இந்த அறிக்கைகள் எல்லாம். இப்போது பழனிபாபா காரில் போனால்கூட சோடாபாட்டிலை எடுத்து அவர் மேல் அடிக்கிறார்கள். அவருடைய உயிருக்கு ஆபத்து. பழனிபாபா ஐ.ஜிக்கும் மற்றும் சில முக்கியமான பொறுப்பிலுள்ளவர்களுக்கும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து வருமானால் இந்த ஆட்சியாளர்கள்தான் பொறுப்பு; அதற்கு முதலமைச்சர் அவர்கள்தான் பொறுப்பு என்ற வகையில் கடிதங்களை அனுப்பியிருக்கிறார் என்பதை, இந்தச் சந்தர்ப்பத்தில் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

அடுத்தபடியாக நம்முடைய போலீஸ் இலகாவைப்பற்றி நடைபெறுகின்ற வேலை நிறுத்தத்தைப் பற்றியல்ல. அதைப் பற்றி நம்முடைய மாண்புமிகு உறுப்பினர்களும், எதிர்க்கட்சி களினுடைய தலைவர்களும் மிக நிரம்ப எடுத்துக் கூறியிருக் கிறார்கள். போலீஸ் இலாகா எந்த அளவிற்கு இன்றைக்கு ஒரு நிர்வாகச் சீர்கேடுடைய இலாகாவாக ஆக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஒன்றிரண்டு உதாரணங்களை மாத்திரம் நான் சொல்ல விரும்புகிறேன்.

ஐ.ஜி. பதவியிலிருந்து ஏற்கெனவே எக்ஸ்டன்ஷனிலே யிருந்த மிஸ்டர் ஸ்டிரேசி அவர்கள் 31-5-1979 அதாவது மே மாதம் ஐ.ஜி பதவியிலிருந்து ரிடையர் ஆகிறார். ஏற்கெனவே எக்ஸ்டன்ஷனில் இருந்தவர், மே மாதம் 31 ஆம்தேதி 1979 ஆம் ஆண்டிலே ரிடையர் ஆகிறார். வயது விதிப்படி அவர்