528
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
எ
அந்தத் தேதியிலே ரிடையர் ஆக வேண்டும். ஆனால் தொடர்ந்து அவர் வேலை பார்க்கிறார். எந்த உத்திரவுப்படி என்றால், எந்த உத்திரவும் கிடையாது. பிறகு அக்டோபர் 12 ஆம் தேதி, இந்த அரசு ஒரு அவசரச் சட்டம் போடுகிறது. தமிழ்நாடு போலீஸ் சட்டத்திலே, இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக, டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் என்று மாற்றுகிறார்கள்.
1
வேடிக்கை என்னவென்றால் அந்த அவசரச் சட்டத்திற்கு ரிட்ராஸ்பெக்டிவ் எபக்ட் கொடுத்து ஜுன் ஒன்றாம் தேதியி லிருந்து அந்த அவசரச் சட்டம் அமலுக்கு வரும் என்று சொல்கிறார்கள். இது முறைதானா என்பதற்கு எனக்குப் பதில் வந்தாக வேண்டும். மே மாதம் ரிடையர் ஆகிற ஒருவர், அக்டோபர் 12 ஆம் தேதி டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் என்ற ஒரு பதவிக்கு மாற்றப்படுகிறார். அவருக்காக ஒரு அவசரச் சட்டம் போடப்பட்டு, ஜுன் மாதம் 1 ஆம் தேதியி லிருந்து ரிட்ராஸ்பெக்டிவ் எபக்ட் கொடுக்கப்படுகிறது என்றால் இந்த இடைக்காலத்தில்-இவர் மே மாதம் 31 ஆம் தேதி ரிடையர் ஆனபோதிலும் அக்டோபர் 31 ஆம் தேதிவரை யிலும்; எந்தவிதமான உத்திரவும் இல்லாமல் அவரைப் பதவி நீட்டிக்கச் செய்வது, பிறகு ஒரு அவசர உத்திரவு மூலமாக ரிட்ராஸ்பெக்டிவ் கொடுத்து நீடிக்கச் செய்தது நியாயம்தானா? சட்டப்படி முறைதானா? இந்தக் கேள்விக்கு நான் பதில் வேண்டுகிறேன். இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
இந்த உத்தரவுக்கு, கீழே உள்ள அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது என்பதற்காகவே பல ஐ.ஜி.பதவிகள் வாரி வாரி வழங்கப்படுகின்றன. மக்கள் வரிப்பணம் இதற்காகப் பாழடிக்கப்படுகிறது. இப்படி ரிடையர் ஆன திரு. ஸ்டிரேஸி அவர்களுக்கு வேலை தரப்படுகிறது. இன்னும் ரிடையரான அவர் ஒரு புதிய பதவியிலே டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் என்கின்ற பதவியிலிலே அமர்ந்து கொண்டிருக்கின்ற நேரத்திலே, தொடர்ந்து ஐ.ஜி.க்கு உரிய யூனிபாரத்தை அணிந்து கொண்டிருக்கிறார். இதற்குச் சட்டம் இடம் தருகிறதா என்றால் இல்லை. இதற்கு நம்முடைய மத்திய அரசாங்கம் யூனிபார்ம் அணிவதைப்பற்றிச் சில விதிகளைத் தயாரித்து