உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

529

இருக்கிறது. அந்த விதிகள் என்னவென்றால் Government of india have decided that there is no objection to permission being granted by state Government to Indian Police Service Officers to wear after retirement uniforms of the rank last held by them immediately before retirement cermonial occasions and police parades. அதாவது விசேஷமான நிகழ்ச்சிகளுக்கும் போலீஸ் பெரேட் போன்றவைகளுக்கும் ரிடையர் ஆன போலீஸ் ஆபீஸர்களுக்கு, அவர்களுக்கு அத்தகைய போலீஸ் யூனிபார்ம் அணிவதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்திரவு வழங்க அப்ஜக்ஷன் கிடையாது என்று சொல்லப்படுகிறதே தவிர, அவர்கள் சாதாரண நாட்களில் இந்த யூனிபாரத்தை அணியலாம் என்பதற்கு எந்தவிதமான விதியும் கிடையாது. ஆகவே விதிமுறைகளுக்கு மாறாக இன்றைக்கு யூனிபாரத் தோடு அந்தப் பதவியிலே இருந்து கொண்டிருக் கிறார். நான் இந்தக் கண்டனத் தீர்மானத்திலே வலியுறுத்திக் கூறுவதெல்லாம் 10 நாட்களுக்குள் அல்லது ஒரு வாரத்திற் குள்ளாக ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் அந்த யூனிபார்ம் இல்லாமல், அந்தப் போலீஸ் பணியை நடத்த வேண்டுமே அல்லாமல் யூனிபாரத்துடன் நடத்துவாரேயானல் யார் கோர்ட்டிற்குப் போனாலும் அவர் அந்த யூனிபாரத்தை கழற்ற வேண்டுமென்ற அடிப்படையிலே கோர்ட்டிற்குப் போக வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை நான் இந்த அவைக்கு முதலமைச்சருக்கு தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அடுத்து, பஸ் ஊழல். பஸ்களைத் தேசியமயமாக்க வேண்டுமென்ற கொள்கை படிப்படியாகப் பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தொடர்ந்து நிறைவேறி வந்திருக்கிறது.

அண்ணாவிற்குப் பிறகு கழக ஆட்சிக்காலத்தில் பெரிய நிறுவனங்களையெல்லாம் டி.வி.எஸ், இராமன் அன்ட் இராமன், எஸ்.ஆர்.வி. எஸ். பொள்ளாச்சி மகாலிங்கத்தினுடைய கம்பெனி போன்ற நிறுவனங்களையெல்லாம் அன்றைக்கு நாட்டுடைமையாக ஆக்கி, அவைகளை அரசின் சார்பிலே போக்குவரத்துக் கழகங்களாக மாற்றிய பெருமை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு உண்டு. அதைத் தொடர்ந்து

18-க.ச.உ.(அ.தீ.) பா-2