உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எல்லா பஸ்களையும் தேசீயமயமாக்கி விடவேண்டும். பொருளாதாரப் பற்றாக் குறையின் காரணமாக எல்லாவற்றையும் உடனடியாகச் செய்ய முடியாது என்றாலும், மாவட்ட வாரியாக அந்தப் பணியை நிறைவேற்ற வேண்டுமென்ற முறையை வகுத்து முதலாவதாக, நீலகிரி மாவட்டத்திலே உள்ள வழித்தடங்களைப் பஸ்களை நாட்டுடமையாக்குவது என்று முடிவெடுத்து. செய்தோம். பிறகு பஸ் முதலாளிகள் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். உயர்நீதி மன்றத்திலே அவர்களுடைய வழக்கு எடுபடவில்லை. அரசுக்குச் சார்பாகத் தீர்ப்பு கிடைத்தது. பிறகு அவர்கள் இன்றைக்கு சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்றிருக் கிறார்கள்.

இதற்கிடையிலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மாற்றப்பட்டு, இங்கே ஆளுநருடைய ஆட்சி நடைபெற்ற காலத்தில் ஆளுநர் அவர்கள் ஒரு உத்தரவைப் பிறப்பிக்கிறார். சுகாதியா ஆளுநராக இருந்தபொழுது 1976ஆம் ஆண்டு ஒரு உத்தரவைப் பிறப்பிக்கிறார். ஒருவர் மூன்று பேருந்துகள் வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு உத்தரவு பிறப்பிக்கப் படுகிறது. ஆனால் அந்த உத்தரவில் தெளிவற்ற நிலை இருந்தது. உதாரணமாக அந்தத் தேதி, அதாவது 1-11-76 என்ற அந்த உத்தரவு இடப்பட்ட தேதியானால் அந்த 1-11-76 க்குள் ஒருவர் ஐந்து அல்லது ஆறு பேருந்துகளுக்கு உரிமையாளராக இருந்தால் மீதமுள்ள பேருந்துகளை என்ன செய்வது? இந்தக் கேள்விக்குச் சரியான விடை கிடைக்கவில்லை. அவைகளை அரசாங்கமே எடுத்துக் கொண்டால் பிரச்சனை தீர்ந்து விடும். ஆனால் அரசாங்கத்தினுடைய ஆளுநர் போட்ட அந்த உத்தரவில், ஆளுநர் ஆட்சியிலே அது குறித்துத் தெளிவாக எதுவும் சொல்லப்படவில்லை. எனவே, மூன்று பேருந்து களுக்குமேல் வைத்து இருந்தவர்கள் தங்களுடைய உறவினர் களுடைய பெயருக்கு மாற்ற, அதிகாரிகளுடைய உதவியை நாடினார்கள். அரசாங்கம் எந்த உத்தரவைப் போட்டும் அப்பொழுது தடுக்கவில்லை. எனவே, ஒரு ‘பினாமி’ ஏற்பாட்டுக்கு அந்த உத்தரவு ஏற்பாடு செய்தது என்றுதான் கருதப்பட்டது.