உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

531

அதற்குப் பிறகு அண்மையில் தஞ்சை, மதுரை மாநக ராட்சித் தேர்தல் நேரத்தில் நம்முடைய பஸ் முதலாளிகள் நம் முடைய முதலமைச்சரை, போக்குவரத்துத் துறை அமைச்சரை இவர்களையெல்லாம் அணுகி, இந்த மூன்று என்று இருப்பதை 5 பஸ்களாக ஆக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, ஏறத்தாழ 70 இலட்சம் ரூபாய் அதற்காகக் கொடுக்கப்பட்டிருக் கிறது என்ற குற்றச்சாட்டை இந்த மாமன்றத்திலே நான் பகிரங்கமாகச் சொல்லிக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

அப்படிக் கொடுக்கப்பட்ட அந்தப் பணத்திற்கு உடனடி யாக உத்தரவு வழங்கப்படவில்லை என்றாலும், இப்பொழுது அண்மையிலே அந்த மூன்று பஸ்கள் என்பது ஐந்து பஸ்களாக ஆக்கப்படும் என்கின்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த உத்தரவிலேகூட, இப்பொழுதுள்ள பஸ் முதலாளிகள் ஏறத்தாழ 70 இலட்சம், பிறகு கடைசியாக 30 இலட்சம் என்று கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயை அவர்களுக்குக் கொட்டித் தீர்த்துவிட்டார்கள்; கொடுத்து விட்டார்கள்.

என்றாலும் கூட, அவர்களுக்கு இன்னும் குறைபாடு நீங்கவில்லை. அவர்களுக்கிருக்கின்ற குறைபாடெல்லாம் ஏற்கனவே உள்ள தற்காலிக வழித்தடங்களில் போக்குவரத்துக் கழகங்கள் அப்ஜெக்ஷன்ஸ் செய்திருக்கின்றன. மற்றவர்களுக் குத் தரக்கூடாது என்று. அது மாத்திரம் அல்லாமல், அதே நேரத்தில் போக்குவரத்துக் கழகங்கள், நம்முடைய கட்ட பொம்மன், பெரியார், அண்ணா, பல்லவன், சேர, சோழ, பாண்டியன் ஆகிய இத்தகைய போக்குவரத்துக் கழகங்க ளெல்லாம் அங்கே வழித்தடங்களுக்கு மனுச்

செய்து

கொண்டிருக்கின்றன. இப்பொழுது பஸ் முதலாளிகளினுடைய கோரிக்கை, நீங்கள் இந்த அப்ஜெக்ஷனை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும்; இந்த வழித்தடங்களுக்குப் போட்டிருக் கின்ற மனுக்களை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டுமென்று. அப்படியானால் மேலும் ஒரு கோடிரூபாய் இதோ தயார் என்று வசூலித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காகத்தான் இப்பொழுது என்ன ஏற்பாடு நடைபெறுகிறது என்றால், உதாரணமாக, பல்லவன் போக்குவரத்துக் கழக பஸ், சென்னையிலிருந்து திண்டிவனம். திருவண்ணாமலை, கரூர்