550
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
'It is now clear that the offer of the Polish vessels was only an attempt to scuttle the Bulgarian deal which had been entered into in pursuance of the Cabinet decision.
மீண்டும் படிக்கிறேன்.
'It is now clear that the offer of the Polish vessels was only an attempt to scuttle the Bulgarian deal which had been entered into in pursuance of the Cabinet decision."
அமைச்சரவை முடிவுப்படி ஒப்பந்தம் செய்து கொள்ளப் பட்ட பல்கேரிய வியாபாரத்தை ஒழித்துக்கட்டவே போலந்து நாட்டுக் கப்பல் ஆஃபர் தரப்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை என்று ராமகிருஷ்ணன், பணிக்கருக்கு எழுதிய கடிதத் தில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கான ஆதாரம், 13, 14, 15, 16, 17, ஆகிய கடிதங்கள். ராமகிருஷ்ணன் எழுதிய கடிதங்களை இங்கே வைத்திருக்கிறேன். அமைச்சரவையின் முடிவுப்படி பூம்புகார் கார்ப்பரேஷன் தந்திக்கு மத்திய அரசு என்ன செய்தது தெரியுமா? எதிலுமே துரிதமாக வேலை செய்யாத மத்திய அரசு இந்த விஷயத்தில் துரிதமாகச் செயல்பட்டது. அதில் பல்கேரியா கப்பலை வாங்கலாம். இவர்கள் வாங்க வேண்டாமென்று பூம்புகார் கார்ப்பரேஷன் மூலமாகத் தந்தி கொடுக்கிறார்கள். ஆனால், மத்திய அரசு பல்கேரியா கப்பலை வாங்கலாம் என்று பூம்புகார் கார்ப்பரேஷனுக்கு 8.5.79ம் தேதியன்று அனுமதி கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் இவ்வளவு உண்மைகளையும் எடுத்துச் சொல்லி, இதில் போகஸ், ப்ராட் இவைகள் எல்லாம் நடைபெறுகின்றது. இத்தனையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த ராமகிருஷ்ணனுக்குத் தரப்படுகின்ற பரிசு என்ன தெரியுமா? மானேஜிங் டைரக்டர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறார். நல்ல காரியங்களைச் செய்தார் என்று இந்த அரசு நம்பியிருந்தால், இவர் உண்மையை அமல்படுத்தினார் என்று இந்த அரசு கருதி யிருந்தால், பதவி உயர்வு கொடுக்காவிட்டாலும், இதே பணியில் தொடர்ந்து அவர் இருப்பாரேயானால், நேர்மையான காரியங்களைச் செய்ய முடியும் என்று கருதி, அவரை வைத்