கலைஞரின் சட்டமன்ற உரைகள்
581
அண்ணா மறைவுக்கு இரங்கல் தீர்மானம்
உரை : 83
C
நாள்: 21.2.1969
மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: தலைவர் அவர்களே, பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்:-
"நமது தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராய்; தமிழ் மக்களின் அண்ணனாய்; தமிழ் மொழியின் காவலனாய்; தமிழ்ப் பேச்சிலும் எழுத்திலும் புதிய பாணியை வகுத்த பாவலராய்; வள்ளுவன் வகுத்த வாழ்க்கைக்கு ஓர் இலக்கணமாய்; தமிழ்ப் பண்புக்கு ஓர் உறைவிடமாய்; உண்மையான ஜனநாயக வாதியாய்; கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பவற்றை வாழ்க்கையாய் அமைத்துக் கொண்டு இந்திய நாட்டின் ஒருமைப் பாட்டிற்கும், தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் அதிலும் குறிப்பாக வசதியற்று சமூகத்தின் அடித் தளத்தில் கிடந்த மக்களுக்குத் தொண்டாற்றி இறுதிவரையில் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராகவே வாழ்ந்தவரும், நமது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரியவராகவும், தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் இருந்தவரான பேரறிஞர் அண்ணா அவர்கள் எதிர்பாராத வகையில் அனுதாபத்தையும் ஆறாத் துயரத்தையும் தெரிவிப்பதோடு, அப்பெருந்தகை மறைவால் வருந்தும் அவரது துணைவியார் ராணி அம்மையாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது."
தலைவர் அவர்களே, பிப்ரவரித் திங்கள் மூன்றாம் நாள் நம்மையும் நாட்டு மக்களையும் நிலைகுலையச் செய்த நாளாகும். தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு புதிய வழியை வகுத்து, அவ்வழி நின்று ஜனநாயகக் கடமைகளைப் பேணிப் பாதுகாக்க
-