உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

வேண்டுமென்று தன்னுடைய வாழ்க்கையை அதற்காக அர்ப்பணித்துக் கொண்ட தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்று நம்மையெல்லாம் விட்டு மறைந்து விட்டார்கள். இந்த மாமன்றத்தில் 1957-ம் ஆண்டு முதல் 1962-ம் ஆண்டு வரையிலும், அதற்குப்பிறகு கடந்த இரண்டு ஆண்டு காலமாக, ஆக ஏழு ஆண்டுகளும் குரலை ஒலித்து, அந்தக் குரலிலே உள்ள நயத்தாலும், கனிவாலும், குறள் வழியில் எடுத்துச் சொல்லப்பட்ட கருத்துக்களாலும், எழுச்சிமிக்க எண்ணங்களாலும் தன்னுடைய கட்சியைச் சேர்ந்தவர்களை மட்டுமல்லாமல் இந்த மாமன்றத்திலே எல்லாக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்களுடைய பேரன்பையும் பாராட்டுதலையும் ஒருங்கே பெற்றவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆவார்கள். அவர்கள் தன்னு டைய வாழ்வில் எதிரியும் தன்னை மதிக்கத்தக்க அளவிற்கு, பாராட்டத்தக்க அளவிற்கு, புகழத்தக்க அளவிற்கு நடந்து காட்டி, அதைப்போல் மற்றவர்களும் நடந்து காட்ட வேண்டுமென்று எடுத்துக் காட்டுகின்ற ஒரு விளக்காக வாழ்ந்தவர் ஆவார்கள். அவர்கள் தமிழக அரசுப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இரண்டு ஆண்டு காலத்திலே முழு சுறுசுறுப்புடன், நல்ல உடல்நலத்தோடு ஓர் ஆண்டு காலம்தான் இயங்க முடிந்தது. அதற்குப் பிறகு அமெரிக்காவிற்குச் சுற்றுலா சென்று, அந்தச் சுற்றுலாவின்போது தமிழகத்தின் பெருமையையும், இந்தியத் துணைக்கண்டத்தின் பெருமையையும் வெளிநாடுகளிலே உயர்த்திக் காட்டி, அப்படி உயர்த்திக் காட்டியதன் மூலம் தமிழகத்தினுடைய பண்பை வெளிப்படுத்தி, வெற்றிகரமாகச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியபோது, தமிழ்நாட்டிலே மட்டுமல்ல, அகில இந்தியா பூராவுக்கும் பிரகாசமான ஒளிமிகும் நட்சத்திரமாகத் திகழ்வாரென்று பாராட்டுகளை அவர்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, எல்லா மக்களும் தெரிவித்த நேரத்தில், அவர்கள் மாண்பு உயர்ந்திருந்த நேரத்தில், திடீரென்று உடல் நலிவு ஏற்பட்டது. அதன் காரணமாக மீண்டும் அவர்கள் அமெரிக்காவிற்குச் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பி உடனே அவர்களுடைய உடல் நலிவு அறவே நீங்கிவிட்டது என்ற நம்பிக்கையோடு, மீண்டும் அண்ணா நமக்குக் கிடைத்து

ம்