உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

(C

583

விட்டார்கள், அவர்களுடைய பொற்காலத்திலேயே தமிழகத் திற்குத் தேவையான நல்ல பல காரியங்கள் செய்துகொள்ளலாம் என்ற பேராசையோடும், துணிவோடும் நாமெல்லாம் காத்திருந் தோம். ஆனால் இயற்கை அந்த எண்ணத்திலே மண்ணைப் போட்டு விட்டது. மீண்டும் உடல் நலிவு ஏற்பட்டதும், அடையாறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும், எப்படியும் அண்ணா அவர்களுடைய உயிரை மீட்டுவிட வேண்டுமென்ற எண்ணத்தில் தமிழ் நாட்டு மருத்துவர்களும், வெளிநாட்டு மருத்துவர்களும் படாத பாடு பட்டதும், கட்சி நலனுக்கு அப்பாற் பட்டு, ஆஸ்திக நாஸ்திக சம்பிரதாயத்திற்கு அப்பாற்பட்டும் ஒருமித்த குரலில் “அண்ணா அவர்கள் நலம் பெற வேண்டும்”, 'அண்ணா அவர்கள் நலம்பெற வேண்டும்” என்று வாழ்த்திய வாழ்த்துக்கள் அத்தனையும் பயன் அற்றுப் போயின. பிப்ரவரித் திங்கள் இரண்டாம் நாள் நள்ளிரவு 12-22 மணிக்கு அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து, வங்கக் கடல் அருகிலே கல்லறையில் உறங்கிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில், நாம் இந்தச் சட்ட மன்றத்திலே அமர்ந்திருக்கிறோம். இந்த இரண்டு ஆண்டு காலத்தில் தமிழகத்தில் எந்தச் சம்பவம் ஏற்பட்டாலும் அந்தச் சம்பவம் அவர்களுடைய உள்ளத்தை எவ்வளவு குடைந் தெடுத்தது என்பதை அவர்களோடு பழகிவந்த தம்பிமார்களாகிய நாங்கள் நன்றாக அறிவோம். எதிர்க்கட்சி நண்பர்களும், தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் நன்றாக அறிவார்கள். குறிப்பாக, அவர்கள் உடல் நலம் பெற்று பூரண ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் கூறிய நேரத்திலேகூட, தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத் தீர்மானத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்த நேரத்திலே அந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று சென்னை சிறுவர் அரங்கத்திலே அவ்விழா நடந்தபோது, மருத்துவர்களும் மற்றவர் களும் அண்ணாவின் உடல் நலத்தையொட்டி அவ்விழாவிலே அவர்கள் கலந்துகொள்ள வேண்டாமென்று கூறியதைப் பொருட் படுத்தாது, "இந்த விழாவில் கலந்துகொள்ளவேண்டாமென்று அனைவரும் கூறினார்கள். மருத்துவர்களும் கூறினார்கள். இந்த விழாவிலே கலந்துகொள்ளாத உடல். உயிர் இருந்தால் என்ன? போனால் என்ன? இந்த விழாவிலே எப்படியும் கலந்து கொள்ள