கலைஞரின் சட்டமன்ற உரைகள்
25
மிரட்டுகிறீர்கள் என்று கேட்டால் உங்களிடம்தான் பத்திரிகை இருக்கிறது என்று பத்திரிகையில் எழுதுவது, கூட்டங்களில் பேசுவது என்ற முறையில் நீங்கள் மிரட்டுகிறீர்களே தவிர வேறு இல்லை.
-
கலைஞர் மு. கருணாநிதி : மிரட்டக் கூடிய அதிகாரம் எங்களிடத்தில் இல்லை மிரட்ட வேண்டிய அவசியமும் இல்லை. அப்படி மிரட்டியதாக - எந்தக் கூட்டத்திலாவது நாங்கள் அர்த்தமில்லாத முறையில், பண்பில்லாத முறையில், பேசியிருக்கிறோம் என்று - அமைச்சர் அவர்கள் எடுத்துச் சொன்னால் அதற்கு நான் தலைவணங்கத் தயாராக இருக்கிறேன். போலீஸாருடைய கஷ்டங்களை எடுத்துக் கூறி வாதாடுவதால் நாங்கள் அவர்களை எங்கள் பக்கம் இழுக்கப் பார்க்கிறோம் எனக் கருதுகிறார்கள். நான் எழுதிய நாடகம் - "உதய சூரியன்” என்ற நாடகம் - சர்க்காரினால் தடை செய்யப்பட்டது. அப்படி தடை செய்யப்பட்டதற்கு என்ன காரணம் என்று போலீஸ் அமைச்சரிடத்தில் நேரில் சென்று நானும் என் தலைவர் அண்ணா அவர்களும் கேட்டோம். அப்போது அமைச்சர் அவர்கள் சில குறிப்புகளைக் காட்டி, இவைகளெல்லாம் ஆட்சேபகரமாக இருக்கின்றன என்று சொன்னார்கள். “அவைகளை விலக்கி விடுகிறேன், அனுமதி தாருங்கள்" என்று கேட்டோம். அவைகளை விலக்கி விட்டு அனுப்புங்கள் என்று சொன்னார்கள் அமைச்சர் அவர்கள். அவைகளைத் திருத்தி புத்தகத்தை அனுப்பினேன். வந்த தகவல் என்ன தெரியுமா? - நாடகம் தடை செய்யப்பட்ட ஒன்று என்ற தகவல் காதுகளுக்கு எட்டியது. போலீஸாருக்காக வாதாடியிருக்கிறீர்கள், இது தவறு, இதில் போலீசாருடைய கஷ்டங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள் இது மிகப் பெரிய தவறு. போலீஸாருடைய கண்ணீரைத் துடைக்க வழி தேடி திராவிட முன்னேற்றக் கழகம் போலீஸ்காரர்களைத் தங்கள் பக்கம் இழுத்து ஃபிரெஞ்ச் புரட்சி போல் இதில் ஏதோ செய்வதாக எண்ணிக் கொண்டு இந்த நாடகத்தைத் தடை செய்ததாக நான் அறிகிறேன். ஆனால் முக்கியமாக இந்தக் காரணம் தான் சொல்லப்பட்டது. எனது பேச்சின் இறுதி கட்டத்தில் ஒன்றை மாத்திரம் - அந்த நாடகத்தில் ஆட்சேபகரமானது என்று சொல்லப்பட்ட அந்த தாலாட்டுப் பாட்டு என்ன என்று படித்துக்
—