உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

காவல்துறை பற்றி

ரூ. 59 ஆகவும் உயர்ந்து, அவர்கள் ரூ. 129 மொத்தச் சம்பளமாகப் பெற்றுக் கொண்டு இருந்தார்கள். இன்றையதினம் அவர்களுடைய சம்பளம் பஞ்சப் படி உள்பட மொத்தமாகப் பெறுவது ரூ. 165 என்பதை இந்த மன்றம் உணரும் என்று நான் கருதுகிறேன். அதைப்போலவே, 1965-ல் தலைமைக் காவலர்களுக்கு அடிப்படைச் சம்பளம் ரூ. 85 ஆகவும், பஞ்சப் படி ரூ. 33 ஆகவும் இருந்து, அவர்கள் அப்போது பெற்றது மாதம் ஒன்றுக்கு ரூ.118 என்ற நிலைமையில் இருந்து, பிறகு 1966-ல் ரூ. 160 என்ற நிலைமைக்கு உயர்ந்து, தலைமைக் காவலர்கள் இப்போது ரூ. 225 மாதம்தோறும் பெறுகிறார்கள் என்ற செய்தியை இந்த மன்றம் உணரும் என்று நான் நம்புகிறேன். இந்த விகிதத்திலே மற்ற அதிகாரிகளுக்கும் சம்பளம் உயர்த்தி இருக்கப்படக்கூடிய அளவுக்கு இந்த காவல்துறையின் ஆணைக் குழுவின் சிபாரிசுகளை இந்த அரசு ஏற்று இருக்கிறது.

அதைப்போலவே, காவலர்களுக்கு வீட்டு வாடகைப் படி சென்னை நகரத்தில் ரூ. 14, மற்ற இடத்தில் ரூ.14, என்று (2-10-1970-க்கு முன்பு) இருந்தது. ஆனால் 2-10-1970-க்குப் பிறகு காவலர்களுக்கு வீட்டு வாடகைப் படி சென்னையில் ரூ. 20 என்றும், மற்ற இடங்களில் ரூ. 20 என்றும், இந்த நிலை 1972-73-ல் சென்னையில் ரூ. 25 என்றும், 1973-74-ல் சென்னையில் ரூ.30 என்றும், மற்ற இடங்களில் ரூ. 25 என்றும் காவலர்களுக்கு அளிக்கப்படுவதும், இதே அளவில் மற்ற அதிகாரிகளுக்கும் இந்த வீட்டு வாடகைப் படி அளிக்கப்படுவதுமான நிலைமைகள் இந்த ஊதியக்குழுவால், போலீஸ் கமிஷனின் பரிந்துரையினால் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

ரூ. 17 லட்சம் செலவில் கிராமக் காவல் நிலையங்களுக்கு 100 மோட்டார் சைக்கிள்களும், 5,000 மிதி வண்டிகளும் (சைக்கிள்கள்) அரசு வழங்கியிருக்கிறது.

காவலர்களுக்கு முன்பு தரப்பட்டு வந்த தினப் படி ரூ. 1.25 என்று இருந்ததை, 2-10-1970-க்குப் பிறகு ரூ. 3 என்றும், தலைமைக் காவலர்களுக்கு ரூ. 2 என்று இருந்ததை ரூ. 4.50 என்றும், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ரூ.2.50 என்று இருந்ததை ரூ. 4.50 என்றும், இன்ஸ்பெக்டர்களுக்கு ரூ. 2.50 என்று இருந்ததை ரூ. 6 என்றும் நாம் உயர்த்தியிருக்கிறோம். இதிலே இந்த இரண்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப இந்த ரூ 3