உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

183

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதை ஒழுங்குபடுத்த நம்முடைய அமைச்சர் பெருமக்களும் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன்; சட்டமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன். அதைப்போன்றே கூட்டங்களை நடத்துகின்ற எல்லாக் கட்சித் தொண்டர்களும், பெருக்கி அமைப்பாளர்களும் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன். 11 மணி முதல் 12 மணி வரை கூட்டங்கள் நடந்தால், முடியும் வரை எந்தக் கூட்டமானாலும் காவலர் நின்று தங்கள் பணியாற்ற வேண்டியிருக்கிறது.

ஒலி

திரு. ஆர். பொன்னப்ப நாடார் : இப்போது லைசென்ஸ் கொடுப்பதிலே ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? யார் லைசென்ஸ் வழங்க வேண்டுமென்று புதிய ஆணை பிறப்பிக்கப் பட்டிருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன்.

டாக்டர் எச். வி. ஹாண்டே : எல்லாத் தரப்பிலும் இருக்கக்கூடியவர்கள் இந்த விதிமுறைகளைக் கடைபிடித்தால், எல்லா அரசியல்வாதிகளின் உடம்புக்கும் நல்லது; எல்லா வற்றுக்கும் நல்லது.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : டாக்டர் என்ற முறையில் திரு. ஹாண்டே அவர்களின் அறிவுரைக்கு நன்றி.

சேலம், வேலூரில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றிச் சொன்னார்கள். அதில் வலது கம்யூனிஸ்டுகள் அதிகம் கலந்திருக்கிறார்கள் என்று நான் சொன்னேன். அப்பொழுது கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர் கல்யாண சுந்தரம் அவர்கள் பத்திரிகையிலே அறிக்கை விட்டார்கள். அந்த அறிக்கையில் சேலம் வேலூரில் கம்யூனிஸ்டு கட்சியே கிடையாது என்று குறிப்பிட்டிருக்கிறார். "சேலம், வேலூரில் நேற்று நடந்த சம்பவங்களுக்கு வலது கம்யூனிஸ்டுகள் காரணமென்று முதலமைச்சர் கூறியிருப்பது கற்பனையே என்றும், வேலூரில் கடந்த 15 ஆண்டுகளாக தங்கள் கட்சிக் கிளை இல்லை என்றும் தமிழ்நாடு வலது கம்யூனிஸ்டுக் கட்சிக் காரியதரிசி தலைவர் கல்யாணசுந்தரம் இன்று இங்கு கூறினார்" என்ற செய்தி 1972-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 1-ம் நாள் “தினமலர்” பத்திரிகையில்