188
காவல்துறை பற்றி
என்பதை எண்ணிப்பார்த்து, போலீசார் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் சட்டமும், ஒழுங்கும் அமைதியும் காப்பாற்றப்படுவதற்கு காவல்துறையினர் எவ்வளவு நிதானப் போக்கினைக் கடைப்பிடித்தார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடியும்
நம் காவல் துறையினருடைய மதிப்பு தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மேலும் உயருவதற்கான ஒரு அடையாள மாகத்தான் ஏறத்தாழ 100-க்கு மேற்பட்ட நாடுகள் கலந்து கொள்ளுகிற இண்டர்போல் என்று சொல்லப்படுகிற உலக காவல்துறை அமைப்பு பாரிசில் அந்த அமைப்பின் மாநாடு அடிக்கடி கூடுகிறது. இந்த ஆண்டு அந்த மாநாட்டில் உலக காவல் துறையின் துணைத்தலைவராக நம் ஐ.ஜி. திரு. அருள் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதை நான் தெரிவித்துக்
கொள்ளுகிறேன்.
அகில இந்திய ரீதியில் காவல் துறையினர் அலுவல் தொடர்புள்ள போட்டிகள் ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் நடைபெறுகின்றன. கைரேகை எடுத்தல், கால் பதிவு எடுத்தல், விசாரணைக்கு அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்துதல், நிழற்படம் எடுத்தல், சட்டம் சார்ந்த மருத்துவம் வேதியல் அறிவு, முதலுதவி அளித்தல், வாகன ஓட்டுநர்களுக்கிடையே வாகனம் பழுதுபார்த்தல், துப்பாக்கி, சுழற்துப்பாக்கி சுடும் போட்டி, கம்பியில்லாத தந்தி மூலம் செய்தியை விரைவாக அனுப்புதல் ஆகிய இந்தப் போட்டிகள் அகில இந்திய ரீதியில் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன
நாம் இந்தப் போட்டிகளில் கடந்த ஐந்தாண்டு காலமாக முதலிடத்தையே பெற்றுவருகிறோம் என்பதைப் பெருமையோடு சொல்லிக்கொள்ளுகிறேன். தொடர்ந்து முதலிடத்தைப் பெற்று வருகிற மாநிலம் தமிழ்நாடுதான் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்தப் போட்டிகளில் கடந்த ஆண்டு மாத்திரம் மொத்தம் 11 தங்கப் பதக்கங்களையும் 5 வெள்ளிப் பதக்கங்களையும் 4 வெண்கலப் பதக்கங்களையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது என்பதையும் நான் பெருமையோடு கூறிக்கொள்வேன்.
அகில இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களோடு நம் மாநிலத்தை இன்றைக்கு சட்டம் அமைதி ஆகியவைகளை