கலைஞரின் சட்டமன்ற உரைகள்
187
பாராட்டுகள் வந்தால் அதை நீங்கள் பெற்றுக்கொள்கிறீர்கள் ? என்று அவர் குறிப்பிட்டார்.
பாராட்டுகளையும் போலீஸ் துறையினர்தான் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் அகில இந்திய விளையாட்டுப் போட்டியில் வழங்கப்பட்ட பரிசுகள் எனக்கு அளிக்கப்படவில்லை, அவைகள் எல்லாம் பரிசு பெற்ற போலீஸ் அதிகாரிகளுக்குத்தான் அளிக்கப்பட்டன என்பதையும் நான் தெரிவித்துக்கொள்வேன்.
போலீஸ் திறமை நம் தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் அனைவராலும் பாராட்டத்தக்க அளவுக்கு மேல்நோக்கி இருக்கிறது என்பதை இந்த அவையில் நடந்த விவாதத்தில் யாரும் மறுக்காதது மட்டுமல்ல அவர்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள், இன்னும் இந்தத் துறை எவ்வாறு செம்மைப்படுத்தப்படவேண்டும் என்கிற கருத்துக்கள் வழங்கப்பட்டன
அந்தவகையில் அந்தத் துறையினுடைய பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறவன் என்ற நிலைமையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் போலீஸார் சார்பாக.
நீங்கள் வாங்கிய பாராட்டுகளுக்கு எல்லாம், இந்த அவையிலே வந்து அவர்கள் தங்களுடைய நன்றியை உங்களுக்குச் சொல்லிக்கொள்ள முடியாத காரணத்தினால், அவர்கள் அத்தனைபேர்களுடைய சார்பாகவும் நான் என்னுடைய நன்றியை, அவர்களைப் பாராட்டிய உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய தமிழக காவல்துறையின் தலைமை அதிகாரியோ, மாவட்டத்திலுள்ள காவல்துறை தலைமை அதிகாரிகளோ, குறிப்பாக சென்னை மாநகரத்தில் பணிபுரிகிற காவல்துறை தலைமை அதிகாரியோ, அவருக்குத் துணையாக இருக்கிற காவல்துறை அதிகாரிகளோ தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு அமைதி இவைகளைக் கட்டிக் காப்பதில் எந்த அளவுக்கு நிதானப் போக்கினைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை நமது நண்பர் வீராசாமி அவர்கள் பட்டியல் போட்டுக் காட்டினார்கள்.
கடந்த ஓராண்டு காலத்தில் நடந்த போராட்டங்களின் வரிசை, அந்தப் போராட்டங்களின் தன்மை, நடைபெற்ற விதம், அந்தப் போராட்டங்கள் எந்த அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டன