உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

229

1974இல் 954 பதிவாகி, 911 கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு, 516 இதிலே தண்டிக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் கடுமையாக இதிலே இருக்க வேண்டுமென்று போலீசார் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள், ஆணையிடப் பட்டிருக்கிறார்கள் என்பதையும் நான் இந்த அவைக்குத் தெரிவிப்பேன்.

சில முக்கிய வழக்குகளில் நம்முடைய காவலர்கள் எவ்வளவு திறமையைக் காட்டியிருக்கிறார்கள் என்பதை யெல்லாம் திரு. பொன்னப்ப நாடார் அவர்களும் நம் நண்பர் சுப்பிரமணியம் அவர்களும் இங்கே பேசிய வேறு சிலரும் அவர்களே சென்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கிற கண்காட்சியைப் பார்வையிட்டோம், அது ஒரு கோணம், இன்னொரு கோணம் இருக்கிறது என்று வாதிட்டார்கள். அவர்களுடைய வாதத்தை நான் மறுக்கவில்லை. பொதுவாகவே போலீஸ் அதிகாரிகள் 45 ஆயிரம் பேரில் அத்தனை பேருமே நல்லவர்கள் என்று வாதிடுவதற்கு நான் எழுந்து நிற்கவில்லை. ஆங்காங்கு சில குறைபாடுகள் இருக்கின்றன

ஆளும் கட்சியின் சார்பில் பேசியவர்களும் எடுத்துச் சொன்னார்கள். தோழமைக் கட்சியின் சார்பில் பேசியவர்களும் எடுத்துச் சொன்னார்கள். எதிர்க்கட்சியின் சார்பில் பேசியவர்களும் எடுத்துச் சொன்னார்கள். ஆகவே போலீசார் ஒரு தலைப்பட்சமாக இருக்கிறார்கள் என்பதற்கு இடமில்லாத வகையில் இந்த மன்றத்திலே இருக்கின்ற ஆளும் கட்சி, எதிர்க் கட்சி, தோழமைக் கட்சி அத்துணை பேருமே அவரவருக்குள்ள குறைபாடுகளை, அவர்களுடைய பகுதியில் நடைபெற்ற சம்பவங்களை எடுத்துக் கூறியதிலிருந்து, போலீசார் ஆளும் கட்சிக்குத்தான் சார்புடையவர்களாக இருக்கிறார்கள் என்ற அந்த வாதம் அடிபட்டுப் போகிறது என்பதை மாத்திரம் நான் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

இதையெல்லாம் மீறி, காவல் துறையில் இருக்கிற நல்ல திறமையாளர்கள், விஷ ஊசிக் கொலை வழக்கு போன்ற வழக்குகளை எந்த அளவுக்குக் கண்டு பிடித்தார்கள்